Page 2 of 6
“லதா, எனக்கு இன்னைக்கு நாலு மணிக்கு என்ன அப்பாயின்ட்மென்ட்?”
“....”
“பர்சனலா? யாரு புக் செய்தது?”
“...”
“ஓ! எப்போ?”
“...”
“ஓகே. சரி தேங்க்ஸ்...”
“ரதி, இது என்ன ப்ளான் எல்லாம் பயங்கரமா இருக்கு? என்ன விஷயம்?” என பாரதியிடம் கேட்டான் விவேக்.
“உங்க கிட்ட சொன்னால் நடக்கும் விஷயமா இருந்தா, நான் ஏன் வேலை மெனக்கெட்டு உங்க செக்ரட்டரி கிட்ட சொல்லி எனக்காக நேரம் ஒதுக்க சொல்ல போறேன்? ஒழுங்கா நாலு மணிக்கு கிளம்பி வாங்க...” என்றாள் பாரதி.
“சரி! என்ன விஷயம்னு சொல்ல மாட்டீயா?”
“ஊஹும்... இங்கே வந்த பிறகு உங்களுக்கே தெரிய தானே போகுது?”
“சரி ரதி... நாலு மணிக்கு வரேன்...” என விவேக்கும் மேலே கேள்விகள் கேட்காமல். ஏற்றுக் கொண்டான்!
🌼🌸❀✿🌷