(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

என் வாழ்க்கையில் ஆனந்தம் கொண்டு வருவதுக்காகவே வந்தவர் நீங்க... அது தான் ஆனந்த்..."

  

விவேக் பதில் ஒன்றும் சொல்லவில்லை... மாறாக, போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்யாது காரை இடது பக்கம் செலுத்தி ஒரு சந்திற்குள் செலுத்தினான். அங்கே இருந்த ஒரு மரத்தின் அருகில் காரை நிறுத்தினான்.

  

என்னாச்சு விவேக்?”

  

புரியாமல் கேட்ட பாரதியை பார்ப்பது போல திரும்பி அமர்ந்தான் விவேக்!

  

நீ என்ன என்ன டையலாக்கோ சொல்லி என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்ற ரதி. எப்படியும் நீ சொன்ன ஸ்பெஷல் கவனிப்பு பென்டிங்கில் இருக்கே... அதுக்கு தான் இங்கே கார் நிக்குது...!”

  

விவேக் கண்களில் எதிர்பார்ப்பு மின்ன சொல்ல,

   

என்னங்க நீங்க, நடு ரோட்டில் காரை நிறுத்தி என்னென்னவோ சொல்றீங்க? வீட்டுக்கு போகலாம் வாங்க...” என்றாள் பாரதி தடுமாற்றத்துடன்!

  

ஹேய் ரதி, பேச்சு மாறக் கூடாது. நான் நீ சொன்ன பேச்சை எல்லாம் கேட்டேனா இல்லையா?”

  

கேட்டீங்க, ஆனால், வீட்டுக்கு போகலாம்ங்க... ப்ளீஸ்... அப்புறம் இதெல்லாம் பேசலாம்... ப்ளீஸ்...”

  

பாரதி வெட்கம் மின்ன கெஞ்சவும், விவேக் தலையை அசைத்தான்!

   

சரி, போனால் போகுது... ஆனால், லெக்சரர் மேடம் சொன்ன ஆனந்த் எங்கே காணாம போச்சு?”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.