”இந்த நிலைமை மாறாதா”
”மாறும் என்னதான் உன் முறைபொண்ணு உன்னை பழிவாங்க நினைச்சாலும் அவளும் பொண்ணுதானே ஒருகட்டத்தில அவளுக்கே உன் மேல ஆசைவரும் அப்படி வர்ற மாதிரி நீ நடந்துக்க”
”சே போடா அவள் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை, அப்படியே கூட நான் வாழ்ந்துடுவேன் ஆனா அவளுக்கு பிடிச்ச மாதிரி வாழ என்னால முடியாது, நான் ஒண்ணும் அவளுக்கு அடிமையில்லை”
”இதை ஏன் அடிமைத்தனமா நினைக்கற நண்பா அன்புக்கு அடிமையாகறதில்லையா“
”வேணாம்டா அவளோட அன்பே வேணாம் அது விஷம்”
”என்னடா சொல்ற”
”ஆமாம்டா அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்வாங்கள்ல அதுபோலதான் அவளும், அவள் அமிர்தம் போல இருக்கா அவளை பருக நினைச்சா கடைசியில எனக்கு விஷம் ஏறிடும், வீரமா செத்தா கூட பரவாயில்லை, இப்படி அசிங்கப்பட்டு அவமானப்பட்டு சாக கூடாது நண்பா“
“என்னடா பேச்சு இது, இன்னும் நீ வாழவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள சாவை பத்தி பேசற அப்படி பேசாத நண்பா, எனக்கு கஷ்டமாயிருக்கு சாவை எதிர்த்து போராடி வாழ பாரு”
”என்னால முடியுமான்னு தெரியலையே நண்பா”
”இந்த பயம்தான் வேணாம்ங்கறது, நீயாரு கொம்பன் ஆயிரம் யானைக்கு சமம்“
”ஆனா அவள் முன்னாடி நான் பூனையாயிடறேனே”