(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அதுக்கு காரணம் உனக்கு பெண் வாசம் படலைல்ல, முதல் முறையா ஒரு பொண்ணுகூட இருக்கறதால மனசு அலைபாயுது, அவ்ளோதான் இதெல்லாம் சகஜம் நண்பா நீ என்ன யார் வீட்டு பொண்ணையா ரசிக்கற உன் முறைபொண்ணைதானே”

  

”என்னமோ போ இன்னிக்கு நாளே நல்லாயில்லை”

  

“சரி வா சாப்பிடலாம்”

  

“நான் வரலை”

  

”அட வாப்பா நீ சாப்பிடலைன்னா இங்க யாருமே வருத்தப்பட மாட்டாங்க, நான்தான் வருந்தனும் நான் சாப்பிடலைன்னா நீதான் எனக்காக வருந்தனும், வாப்பா உன் அப்பா அம்மாவுக்காகவாவது வந்து சாப்பிடு, பாவம் அவங்க உன்னை நினைச்சி அங்க இருப்பாங்க சாப்பிட்டாங்களோ இல்லையோ என்னவோ“

  

”ஆமாம்டா எனக்கும் அதை நினைச்சா கவலையா இருக்கு”

  

”ஒண்ணு செய்யலாம் நீயும் நானும் சாப்பிடலாம், அடுத்து நீ படுத்து ஓய்வெடு நான் போய் உன் வீட்ல நீ நல்லபடியா சாப்பிட்டேன்னு சொல்லிட்டு வரேன்“

  

”டேய் டேய் நானும் வரேன்டா“

  

“வேணாம்டா காலையிலதானே அவங்க வீட்டுக்குப் போனாங்க, இப்ப நீ போனா அவங்க என்ன நினைப்பாங்க, அதுவும் உன் பொண்டாட்டியில்லாம நீ தனியா போய் நின்னா அவங்க பயத்தில பதறிடமாட்டாங்களா, ஜோடியா போனாதான் அவங்களும் நிம்மதியா இருப்பாங்க”

  

”அவளை கூப்பிட்டா வரமாட்டாளே”

  

”அதுக்கென்ன பண்றது நண்பா, விட்டுப்பிடி முடிஞ்சவரைக்கும் உன் உணர்ச்சிகளை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.