(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”சே இவளால அடிக்கடி எனக்கு காய்ச்சல் வந்துடுது, மறுபடியும் பச்சை தண்ணியில குளிக்கனுமா அய்யோ“ என புலம்பிக் கொண்டே எழுந்து நின்று அந்த அறையை விட்டு வெளியேறி காவேரியை தேடி வர அவளோ அவனுக்காக காத்திருந்தாள் அமைதியாக அவளிடம் வந்து நின்றான் என்ன ஆனாலும் சரி ஒரு வார்த்தைக்கூட பேசிடக்கூடாதென இருந்தான் அவளோ அவனின் முகத்தைக்கண்டு இளப்பமாக புன்னகை பூத்தவள்

  

”சீக்கு வந்த கோழி போல இருக்க, என்னாச்சி உணர்ச்சி வசப்பட்டியா ச்ச்ச்சு பாவம்” என பரிதாபப்பட அவனுக்கு வெறுப்பே வந்தது. அவளைக்கடந்து காரில் ஏறி அமர்ந்தான் அவளும் காருக்குள் ஏறினாள் டிரைவர் வண்டியை ஓட்டியபடியே இருவரையும் நோட்டம் விட்டான்.

  

காவேரி இன்னும் அவனின் நிலைமையை பார்த்து பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருந்தாள், கொம்பனோ குளிர்காய்ச்சல் வந்தவன் போல உடலை குறுக்கிக் கொண்டு அவளின் ஏளன சிரிப்பிற்கு பலியாகி கூனி குருகிப் போனான், டிரைவருக்கு எதுவுமே விளங்கவில்லை, குழப்பத்துடனே வீட்டிற்கு வண்டியை விட்டார்.

  

சிறிது நேரத்தில் வீடு வரவும் அவசர அவசரமாக கொம்பன் இறங்கி கொல்லை புறம் நோக்கி ஓடவும் அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை மொத்தமாக சிரித்து முடித்தாள் காவேரி.

  

அவளின் சிரிப்பு சத்தம் கிணற்றடி வரை கேட்டது. அதைக்கேட்டு கோபத்தில் வெகுண்ட கொம்பனும் கிணற்றில் நீரை இறைத்து இறைத்து தன் மீது ஊற்றி தனது உடல் சூட்டை தணித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

  

சொட்ட சொட்ட நனைந்தபடி வந்தவனைக்கண்ட கணக்குபிள்ளைக்கு ஏதோ ஒன்று புரிந்தது ஆனால் சண்முகமோ

  

”மாப்பிள்ளை என்னாச்சி ஏன் நனைஞ்சிருக்கீங்க” என கவலையாக கேட்க அவனோ

  

”மழையில நனைஞ்சிட்டேன் மாமா” என சொல்லிவிட்டு காவேரியின் அறைக்குச்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.