”எல்லாத்தையும் ஒரே நாள்ல கத்துக்கனும்னு அவசியம் இல்லையே”
”அதுக்காக தினமும் உன்கூடவே நான் அலைவேன்னு நினைச்சியா”
”நீ ஒண்ணும் வரவேணாம், இங்கிருக்கறவங்க கிட்ட கேட்டு கத்துக்கிட்டு வேலை செய்றேன் போதுமா”
”ஏன் இப்படி என்னவோ மாதிரி பேசற என்ன பிரச்சனை உனக்கு”
”பசிக்குது” என்றான் பாவமாக அதில் அவள் மனம் கரைந்தாள். அய்யோ பாவம் என நினைத்தவள்
”சரி சரி வா வீட்டுக்குப் போகலாம் எனக்கும் பசிக்குது” என சொல்ல உடனே உற்சாகமாக எழுந்தான் கொம்பன்
”இதுக்கு மட்டும் உடனே ரெடியாயிடுவியே சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை எப்படி வளர்த்து வைச்சிருக்க பாரு எருமைமாடு கணக்கா” என சொல்ல அவனுக்கு கோபமே வந்தது
”என்னது எருமைமாடா யாரை பார்த்து எருமைன்னு சொன்ன”
”உன்னைப் பார்த்துதான், உன்னையும் எருமையையும் பக்கத்து பக்கத்துல நிக்க வைச்சா வித்தியாசமே தெரியாது, ஒரே மாதிரி இருப்பீங்க” என சொல்லி கலகலவென சிரிக்க அதில் அவனுக்கு அவமானமாகிப் போனது
சட்டென அவளை தள்ளிக்கொண்டு ஒரு பக்க சுவரில் நிற்க வைத்தான். அவளோ அவனை தடுக்க முயல அவனோ அவளின் இரு கைகளையும் மேல்புறம் தூக்கி சுவரோடு சுவராக ஒட்ட நிப்பாட்டி அவள் மேல் சாய்ந்து நின்றான், அதில் அவளுக்கு வலி ஏற்பட்டது
”ஏய் என்ன செய்ற நீ”