பார்த்துக்கிறோம், அவர் கண்ல கண்ணீர் வராம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு, நாங்க ஏன் அவரை கண்கலங்க வைக்கப் போறோம்,
அவரு யாரு இந்த வீட்டு மருமகன், என் அப்பாவுக்கு இன்னொரு மகன் போல, அப்படியிருக்கறப்ப அவரை நாங்க கஷ்டப்படுத்துவோமா, நீங்க தைரியமா கிளம்புங்க, அவருக்கு ஒண்ணும் ஆகாது கொஞ்ச நாள் கழிச்சி பாருங்க, அவர் இங்க சந்தோஷமா இருக்கறதை பார்த்து நீங்களும் சந்தோஷப்படுவீங்க, என்னை நம்பி அவரை விட்டுட்டுப் போங்க, அவரை கண்ணுக்குள்ள வைச்சி நான் பார்த்துக்கறேன்” என சொல்ல அவர்களுக்கு நிம்மதியாகிப் போனது
ஆனால் அவளது பேச்சை நம்ப மறுத்த கொம்பன் மட்டும் அவளை பார்த்து முறைக்க அவளோ அவனைப் பார்த்து இளப்பமாகச் சிரித்தாள்.
சண்முகம் கூட அவர்களிடம் இதமாக பதமாக பேசி வழியனுப்பி வைத்தார், அவர்கள் காரில் ஏறி செல்வதைக்கண்ட கொம்பனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை, மனம் உடைந்துப் போய் கண்கள் கலங்க அதைக்கண்ட கணக்குபிள்ளையும் கண்கள் கலங்க காவேரி பார்த்தாள், தலையில் அடித்துக் கொண்டாள்
”போதும் போதும் கண்ணை கசக்கிகிட்டு நின்னது, உள்ள வாங்க எல்லாருமே பார்க்கறாங்க, மானம் போகுது வாங்க சீக்கிரம்” என அதட்டிவிட்டு அவள் தன் தந்தையுடன் வீட்டிற்குள் செல்ல கொம்பனோ துக்க பெருமூச்சுவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு கணக்குபிள்ளையுடன் அந்த வீட்டிற்குள் கனத்த மனதோடு பிரவேசித்தான்.
கொம்பனுக்கு மனம் ஆறுதல் அடையவில்லை, பெற்றோரின் பிரிவில் வாடினான் அவனுக்கு ஆறுதல் சொன்னான் கணக்குபிள்ளை
”விடுவிடு இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி கொம்பா கல்யாணம் ஆனாலே சில தியாகங்களை செய்தாகனும், அதுல இதுவும் ஒண்ணு, அவங்க என்ன வெளியூர்லயா இருக்காங்க, இந்த ஊர்லதானே இருக்காங்க, பார்க்கனும்னு தோணிச்சின்னா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம், இதுக்குப் போய் சின்ன புள்ளையாட்டம் கண்ணை கசிக்கிக்கிட்டு இருக்கலாமா” என சொல்ல அதில் கொம்பனும் சற்று ஆறுதலானான், அதை