(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”ம் உன் மருமகளுக்கு காபி வேணுமாம் அதான் வந்தேன் நகரு காபி போடனும்“

  

”என்னவோடா இப்படியே ஒவ்வொரு விசயத்தையும் புரிஞ்சி அனுசரிச்சி போய்ட்டா அப்புறம் உனக்கு தன்னால எல்லாமே பழகிடும், இவ்ளோதான்னு நினைச்சிப் பாரு எல்லாமே உனக்கு அல்ப்ப விசயமா தெரியும், யாரும் விட்டுக்கொடுக்கலைன்னா என்ன நீ விட்டுக்கொடுத்து போ, அதனால நீ ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட சரியா”

  

”சரிம்மா சரி என்னை காபியை போடவிடு” என சொல்லியவன் காவேரிக்காக காபி போட்டு சுடசுட எடுத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்றான். அதற்குள் அவள் எழுந்து அமர்ந்திருந்தாள்.

  

”இந்தா காபி” என வெறுப்பாக நீட்ட அவளும் அதை வாங்கிக் கொண்டு பருகினாள் ருசியாக இருந்தது அவளே அசந்துவிட்டாள்.

  

மிகவும் ரசித்து ருசித்து அந்த காபியை பருகி முடித்து காலி டம்ளரை அவன்புறம் நீட்ட அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து செல்லாமல் தயங்கி தயங்கி நின்றான் கொம்பன் அவன் நிற்பதைக்கண்ட காவேரியோ

  

”என்ன விசயம்”

  

”அது வந்து“

  

”அதான் வந்துட்டியே சொல்லு என்ன விசயம் எதுக்கு தயங்கற“

  

”இல்லை என் அப்பாவும் அம்மாவும் இன்னும் எத்தனை நாள்தான் இங்கயே இருப்பாங்களாம், அதனால அவங்களை அவங்க வீட்டுக்கு அனுப்பலாம்னு இருக்கேன் அதைப்பத்தி உன்கிட்ட தகவல் சொல்லலாம்னு”

  

”தகவலா இல்லை அனுமதியா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.