(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

என புலம்பிக் கொண்டே சமையல் அறைக்குச் செல்ல அங்கு அவனது தாயோ வேர்க்க விறுவிறுக்க சமையல் செய்ய அதைக்கண்டு பரிதாபப்பட்டான்

  

”அம்மா என்னம்மா இப்படி கஷ்டப்படற, வேணாம்மா இதையெல்லாம் செய்யாத வேணும்னா வேலைக்கு ஆட்களை போடலாம்மா”

  

”என்னடா இப்படி பேசற இதுவும் நம்ம வீடுதான் நம்ம வீட்ல நான் சமைக்க கூடாதா”

  

”ப்ச் அம்மா நீ ரொம்ப கஷ்டப்படற போதும்மா, என் தலையெழுத்துதான் சரியில்லை இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகி கஷ்டப்படறேன், உனக்கென்னம்மா கேடு, நீ மகாராணிம்மா நீயும் கஷ்டப்படறதை பார்க்க என்னால முடியலைம்மா”

  

”இதெல்லாம் எத்தனை நாளுக்கு, கொஞ்ச நாளுக்குதான் என் மருமகள் மனம் மாறி உன்னை ஏத்துக்கிட்டாள்ன்னு வையேன் உடனே அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடலாம் அதுவரைக்கும் இங்க இருக்கேனே”

  

”வேணாம்மா அவள் மனசு எப்ப மாறுமோ மாறாதோ, அதுவரைக்கும் நீ கஷ்டப்படனுமா வேணாம் நானே இங்க இருக்கேன் நீயும் அப்பாவும் நம்ம வீட்டுக்குப் போங்க”

  

”என்னடா இப்படி பேசற நாங்க போன பின்னாடி உனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா என்ன செய்வியாம் நாங்க இருந்தா உனக்கு துணையா இருப்போம்ல“

  

”நீங்க இருக்கறதாலதான் என் முறைபொண்ணு ரொம்ப ஆட்டம் போடறா நீங்க இல்லைன்னா அவள் அமைதியாயிருப்பா”

  

”அப்படி சொல்லாத கொம்பா”

  

”அம்மா என் பேச்சைக் கேளு, கஷ்டமோ சுகமோ நானே பட்டு அனுபவிக்கிறேன் எனக்காக நீயும் அப்பாவும் இங்க இருந்து கஷ்டப்பட வேணாம்”

  

”அப்படியில்லைடா நாளைக்கே ஏதாவது பிரச்சனைன்னா நீ கண்ணை கசக்கிக்கிட்டு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.