(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அசைவில் என்னவென பார்த்து

  

”தூங்கலையா”

  

”தூக்கம் வரலை“

  

“அப்படியா சரி எப்ப தூக்கம் வருதோ அப்ப வந்து தூங்கு, என்னை மட்டும் எழுப்பாத குட்நைட்” என சொல்லிவிட்டு அவள் உறங்கலானாள்.

  

அவனோ துக்க பெருமூச்சுவிட்டுவிட்டு அக்கம் பக்கம் பார்த்தான் அங்கு இருந்த அலமாரியை திறந்துப் பார்த்தான், அவளது உடைமைகள் இருந்தது அதில் ஒரு புதிய டைரி மட்டும் பார்க்க நன்றாக இருக்கவும் ஆர்வமாக அதை எடுத்துப் பார்த்தான்.

  

புது டைரி இன்னும் யாருடைய கைகளும்படாமல் புத்தம் புதிதாக இருந்தது, அந்த டைரியின் காகிதங்களின் வாசம் கூட அவனுக்கு பிடித்திருந்தது, உடனே டைரியை எடுத்துக் கொண்டு தேடிப்பிடித்து பேனாவுடன் அங்கிருந்த படுக்கையில் சாய்ந்தபடி அமர்ந்தான், அந்த அசைவில் மீண்டும் கண்கள் திறந்துப் பார்த்தாள் காவேரி அதைக்கண்டவன்

  

”தூங்கு தூங்கு” என அவளது தோளில் தட்டிக் கொடுக்க அவளுக்கு கோபம் வரவில்லை

  

அவளது தாய் இப்படித்தான் தட்டி தூங்க வைப்பாள் அந்த நினைவில் நிம்மதியாக உறங்கிப் போனாள், அவள் உறங்கியதும் கொம்பன் அந்த டைரியில் காவேரியை சந்தித்த நிமிஷம் முதல் நடந்த அனைத்தையும் அதில் எழுதலானான்.

  

யாரிடம் தனது கஷ்டத்தை சொல்லி புலம்புவது? சொன்னாலும் யாரும் அதை பெரிதாக எண்ணவில்லை, அதனால் தனது மன புழுக்கத்தை அந்த டைரியில் எழுதி கொட்டி நிம்மதியாகி அதை பத்திரமாக ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான், என்னவோ மனதில் இருந்த பாரம் முழுவதும் இறங்கியதால் அவனுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.