வீட்டுக்கு வந்துட்டா நல்லாயிருக்காதுடா, நம்ம வீட்டு மானம் போகும் உன் வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும்”
”அப்படியெல்லாம் நான் வரமாட்டேன்மா, என்னை நம்பு எவ்ளோ பிரச்சனை வந்தாலும் சரி தாங்கிக்கிட்டு இந்த வீட்ல கிடப்பேனே தவிர நம்ம வீட்டுக்கு வரமாட்டேன்மா”
”என்னடா இப்படி பேசற, உன்னால இங்க அனுசரிச்சி வாழ முடியுமா”
”வாழ்ந்துக் காட்டறேன்மா என்ன செய்றது இதுதான் வாழ்க்கைன்னு முடிவான பின்னாடி இதை விட்டு வரவா முடியும்”
”எதுக்கும் ஒரு ரெண்டு நாள் இருக்கோமே“
”ரெண்டு நாள்ல மட்டும் என்ன பெரிசா மாற்றம் வந்துடப் போகுது”
”உன்னை நினைச்சா கவலையா இருக்கு கொம்பா, சூதுவாது தெரியாம உன்னை செல்லமா வளர்த்து ஆளாக்கிட்டேன், புகுந்த வீட்ல நீ எப்படி இருப்பியோ என்னவோ தெரியலையே, உனக்கு என்னாகுமோ ஏதாகுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் அல்லாடிக்கிட்டு இருக்கனுமா சொல்லு, அதைவிட உன்னை பார்த்துக்கிட்டே இருக்கேனே வேணும்னா அப்பாவை வேணா அனுப்பிடலாம்”
”என்னை நினைச்சி கவலைப்படாதம்மா நீயில்லாம அப்பா என்னிக்கு தனியா இருந்திருக்காரு சொன்னாக் கேளும்மா கிளம்பும்மா”
”இதுதான் உன் பதிலா”
”இதுதான் என் முடிவு இங்க ஏதாவது பிரச்சனை வந்தா கணக்குபிள்ளைகிட்ட தகவல் சொல்லிவிடறேன், அப்ப வா இப்ப கிளம்பு, சாப்பிட்டு கிளம்பு ஆமா அடுப்பு காலியாயிருக்கா“
”இருக்கு ஏன் கேட்கற”