(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”கண்ணா ராஜா காலம் மாறிப்போச்சி அதுக்கு ஏத்த மாதிரி நீயும் மாறிக்கனும் பிடிவாதமா இருக்க கூடாது”

  

”இதப்பாரு நீ இருக்கற இடத்துக்கு ஏத்த மாதிரி வாழ பழகிக்க”

  

”உன் புகுந்த வீட்டாளுங்க கொஞ்சம் கெடுபிடியானவங்க, அவங்க பிடிச்ச முயலுக்கு 3 கால்ன்னு சொன்னா ஆமாம்னு நீ தலையாட்டி வைக்கனும் அவங்ககிட்ட போய் சரி எது தப்பு எதுன்னு வாதாடக்கூடாது புரியுதா”

  

”உனக்கு இங்க என்னென்ன கொடுமை நடக்கமோ தெரியலை, முடிஞ்சவரைக்கும் சமாளி முடியாத பட்சத்தில எங்களுக்கு தகவல் சொல்லிவிடு, உடனே ஓடிவந்து உன்னை பார்க்கறோம், அய்யோ நாம படற கஷ்டத்தை சொன்னா நாங்களும் கஷ்டப்படுவோமேன்னு நினைச்சி நீ எதையும் மறைச்சி வைச்சிக்காதப்பா, அதுவே உனக்கு கஷ்டத்தை தரும் கொஞ்ச நாள் பொறுமையா இரு, எல்லார்கூடவும் அனுசரிச்சி நடந்துக்க, அப்புறம் பாரு உன்னை எல்லாருக்கும் பிடிச்சிப் போகும், இப்ப இருக்கற கஷ்டம் நிலையானதில்லை போக போக உனக்கு எந்த கஷ்டமும் வராது” என சொல்ல அவனோ  தலையை மட்டும் ஆட்டினான் பேச கூட இயலவில்லை அந்தளவிற்கு வருத்தமுடன் இருந்தான் கொம்பன்.

  

அதற்குள் காவேரியும் சண்முகமும் வரவே கொம்பனின் பெற்றோர் அவர்களிடம் சென்று பேசினார்கள்

  

”என் பையன் பேரு கொம்பன், ஆயிரம் யானைக்கு சமமான வீரன், இருந்தாலும் மென்மையானவன் வெளி உலகத்தை பெரிசா பார்க்காதவன், யாராவது உதவின்னு வந்து கேட்டா செய்வானே தவிர இதுவரைக்கும் ஈ காக்காக்கூட துரோகம் இழைச்சதில்லை, பொய் சொல்லமாட்டான், தப்பான பழக்கம் ஒண்ணுகூட கிடையாது, ஒத்த புள்ளைங்கறதால பாசம் கொட்டி வளர்த்ததால கொஞ்சம் பிடிவாதக்காரனா இருக்கான் அவ்வளவுதான்

  

எல்லாம் உங்களோட அனுசரிச்சி நடந்துக்குவான், நல்லா சாப்பிட்டு பழகினவன் விதவிதமா சாப்பிடுவான், அதுக்காக உங்களை நான் எதுவும் சொல்லலை, அவன் தப்பே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.