(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

செய்தாலும் சோறு போடாம இருந்துடாதீங்க, என் புள்ளை பசி தாங்கமாட்டான் பார்க்கதான் ஆளு ஜல்லிக்கட்டு காளை போல இருந்தாலும் இன்னமும் அவன் குழந்தைதான்

  

சின்ன பிரச்சனை வந்தாலும் மனசு தாங்க மாட்டான் உடைஞ்சிப் போயிடுவான், யாராவது கண்ணீர் விட்டாலே இவனோட கண் கலங்கிடும், எங்க வீட்ல ராஜா மாதிரி வளர்ந்துட்டான், பெரிசா வேலை எதுவும் செய்யத் தெரியாது, ஆனா சொல்லிக் கொடுத்தா கத்துக்கிட்டு செய்து முடிப்பான், அதுல ஏதாவது சின்ன சின்ன தப்பு இருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சி விட்டுடனும்

  

அவனுக்கு அனுபவம் இல்லை, போக போக எல்லாம் கத்துக்குவான் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி நடந்துக்குவான், அதுக்காக தண்டனை எதுவும் கொடுத்துடாதீங்க பாவம் வெகுளியாவே வளர்ந்துட்டான், எங்களை தவிர அவனுக்கு வேற உலகமே கிடையாது, அவனை கண்கலங்காம பார்த்துக்குங்க, அது போதும் எங்களுக்கு” என சொல்ல காவேரிக்கு சிரிப்பாக இருந்தது

  

”என்ன இது? இவங்க இப்படி பேசறாங்க, என்னவோ பொண்ணை கட்டிக்கொடுத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கற மாதிரி வசனம் பேசறாங்களே, இவனை பாரு பொண்ணு போல நெளிஞ்சிக்கிட்டு அம்மாவோட முந்தானையை பிடிச்சிக்கிட்டு கண்கலங்கி நிக்கறான், ம்ஹும் இது சரிபட்டு வராது, பேருதான் கொம்பன் பார்த்தா குழந்தை போல இருக்கான், இப்படி இருந்தா எப்படி இவனோட குடும்பம் நடத்தறது, கடவுளே இது என்ன சோதனை, எனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கையா அமையனும்” என மனதுள் புலம்பியவள் கொம்பனின் பெற்றோரிடம்

  

”அத்தை மாமா என்கிட்ட உங்க பையனை ஒப்படைச்சிட்டீங்கள்ல கவலைப்படாதீங்க, நான் அந்தளவுக்கு கொடுமைக்காரியில்லை, ஏதோ என் விசயத்தில நடந்த அநீதிக்காக அவரை கல்யாணம் செய்துக்கிட்டேன், நாள் போனா தன்னால எனக்கு அவர்மேல விருப்பம் வரும், அதுவரைக்கும் அவர் கொஞ்சம் பொறுத்துப் போய்தான் ஆகனும்

  

என்ன செய்றது வாழ வந்துட்ட பின்னாடி கண்ணை கசக்கினா வாழ முடியுமா சொல்லுங்க, எல்லாம் நாங்க அவரை தங்கமா பார்த்துக்கறோம், உங்களை விட அவரை பத்திரமா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.