(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“வாவ் சிஸ்டர்! என்ன சாஃப்ட் இட்லி? மாவு அரைக்கும் போது என்ன எக்ஸ்ட்ராவா சேர்ப்பீங்க? நானும் என்னென்னவோ டெக்னிக் எல்லாம் ட்ரை செய்துட்டேன். வொர்க்கே ஆகலை,” என ஆவலுடன் கேட்டான் சாந்ததுரை.

  

“நீங்க சமைப்பீங்களா?” என்றாள் சத்யா நம்ப முடியாமல்!

  

“நல்ல கேள்வி கேட்டீங்க. என்னோட பொழுதுபோக்கே அது தான்! கிளினிக், அங்கே இல்லைனா கிச்சன். அதான் என் உலகம்!”

  

"ஏன் உங்க அம்மா, மனைவி எல்லாம் சமைக்க மாட்டாங்களா?”

  

“அம்மா இறந்து நாலு வருஷம் ஆச்சு சிஸ்டர். மனைவின்னு இன்னும் யாரும் வரலை. அந்த போஸ்ட் இப்போதைக்கு வேக்கன்ட்டா தான் இருக்கு.”

  

“இருக்கட்டும்! இருக்கட்டும்! நீங்க தான் அந்த பெரிய வீட்டு பையன்னா நேராவே போயிருக்கலாமே, எதுக்கு இந்த திருட்டுத்தனம்???”

  

“அந்த வீட்டுக்கு நான் முதலாளியா போக முடியாத நிலைமைல இருக்கேன் சிஸ்டர். ஏன்னு எல்லாம் இப்போ கேட்காதீங்க. லீகலான நல்ல காரணம் இருக்கு. மத்தபடி உங்க ஹஸ்பன்ட் என்னை இங்கே சாப்பிட கூப்பிட்டுட்டு வந்திருப்பாரா? நேரா போக முடியலையேன்னு வாய்ப்பு கிடைக்கும் போது இப்படி போய் பார்ப்பேன். பாட்டி இப்படி புதுசா லேடி ராம்போவை அந்த வீட்டுல வச்சிருக்கது எனக்குத் தெரியாமப் போச்சு!”

  

சக்தி அவனைப் பார்த்து முறைத்தாள். அவளையே பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த சாந்ததுரை பயந்தவனைப் போல தோளை உயர்த்திக் கொண்டு சிரித்தான்.

  

அடுக்கி வைக்கப்பட்டிருந்ததுப் போல இருந்த அழகான பற்கள், விரிந்த அவனின் உதடுகளின் நடுவே தெரிந்தது.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.