(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ந்த வித பதற்றமும் இல்லாமல் பாரதி சொன்ன பதிலால், கற்பகத்தின் முகத்தில் கோபத்தின் சாயல்கள் தோன்றியது.

   

பாரதியின் அருகில் அமர்ந்திருந்த உமாவின் நிலைமை பாரதியை விட மோசமானதாக இருந்தது. கற்பகம் பாரதியிடம் கேட்ட கேள்வி உமாவையும் பாதித்திருந்தது. தொடர்ந்து அங்கேயே இருப்பது அவளுக்கு தர்ம சங்கடத்தைக் கொடுத்தது... கற்பகம் இருக்க சொன்ன ஒரே காரணத்திற்காக தயக்கத்துடன் அமர்ந்திருந்தவள், இப்போது மீண்டும் பாரதியைப் பார்த்தாள்! பாரதியின் மனதில் இருப்பதை அவளாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது... அதற்கு மேல் அங்கே இருக்க விரும்பாமல்,

  

அத்தை, அவர் அஞ்சு மணி போல ஃபோன் செய்ய சொன்னார்... மறந்துட்டேன்... நீங்க பேசிட்டே இருங்க, நான் வரேன்...” என்று சொல்லி விட்டு, கற்பகம் பதில் சொல்ல கூட தாமதிக்காமல் அங்கே இருந்து நழுவிச் சென்றாள்.

   

உமா தனக்காக செல்வது புரிந்து, பாரதிக்கு உமாவிடம் இருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது. அதே நேரம், கற்பகத்தின் மனம் கடுத்தது!!!

  

எவ்வளவு பெரிய விஷயத்தை பத்தி பேசிட்டு இருக்கேன், இப்போ ஃபோனா முக்கியம்? ஒரு வேளை உமாவுக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமோ?”

  

மனதில் எழுந்த கேள்வியை அடக்கி விட்டு,

  

பாரதி, என்ன தான் காலம் மாறி போய் இருந்தாலும் நம்ம ட்ரேடிஷன் படி ஒருவனுக்கு ஒருத்தின்றது தானே முறை? காதலிச்சேன் அவன் சரியில்லை அதனால் உங்க மகனை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு என் கிட்டேயே இவ்வளவு தைரியமா சொல்ற அளவிற்கு இது சின்ன விஷயமா?” எனக் கேட்டாள் கற்பகம்.

  

இல்ல அத்தை, உங்களை ஹர்ட் செய்யனும்னு அப்படி சொல்லலை... அதை எப்படி சொல்ல? பணத்துக்காக லவ் செய்த என்னை விட்டுட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லிட்டு, அதே பணம் கிடைக்கும்னு தெரிஞ்சதும் திரும்ப என்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.