(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

“... விவேக்குக்கா இப்படி ஒரு வாழக்கை அமையனும்? அவன் சட்டையில சின்ன அழுக்கு இருந்தா கூட போட மாட்டானே? என் மகன் இனி வெளியே தலை காட்ட முடியுமா? எங்கே போனாலும் எல்லோரும் கேலி பேசுவாங்களே!...”

  

ற்பகம் சொல்ல சொல்ல பாரதியின் மனதில் அவளையும் அறியாமல் குழப்பமும், குற்ற உணர்வுவும் ஒன்றாக எழுந்தது... கற்பகம் சொவதும் உண்மை தானே... வம்பு பேசுபவர்கள் உண்மையை மட்டுமா சொல்வார்கள், திரித்தும் தானே சொல்வார்கள்... ஆனந்திற்கு அவளால் அவமானம் ஏற்பட போகிறதா? இதை எல்லாம் ஏன் அவள் முன்பே யோசிக்கவில்லை?

  

பாரதியின் மனம் ஜெட் வேகத்தில் பல பல குழப்பங்களை கேள்விகள் வழியாக கொடுத்துக் கொண்டிருந்தது... அதனால் அவள் மௌனமாகிப் போயிருந்தாள்!

   

பாரதி எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து, கற்பகத்தின் கோபம் இன்னமும் அதிகமாகியது... அவளுடைய மகனை நினைத்து தான் பாரதி வருந்திக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்துக் கொள்ள வழி இல்லாததால், திமிரைப் பார், என மனதில் கறுவினாள்...

   

கடந்த சில நாட்களாகவே பாரதி மீது மனதினுள் இருந்த மொத்த கோபமும் ஒன்றாக கற்பகத்தின் வார்த்தைகள் வடிவில் இப்போது வெளி வந்தது...!!!!

   

“...கேள்வி கேட்டா நல்லா தான் பேசுற... உனக்கு நான் பேச சொல்லி தரனுமா என்ன? எப்படியோ என் மகனை மயக்கி வச்சிருக்க... மத்த ஸ்டுடென்ட்ஸ் எல்லோரையும் விட்டுட்டு நீ மது கிட்ட அதிக அக்கறை எடுத்தப்போவே நான் யோசிச்சிருக்கனும்... காலேஜ் படிக்கும் போதே ஆம்பளைப் பசங்களை எப்படி மயக்குறதுன்னும் கத்து கிட்டவ ஆச்சே, உனக்கு...”

  

அதுவரை இருந்த பொறுமை மறைய, கற்பகத்தின் பேச்சில் குறுக்கிட்டாள் பாரதி.

  

அத்தை ப்ளீஸ்...”

  

என்ன பெரிய ப்ளீஸ்? நீ இப்படி ப்ளீஸ், சாரின்னு சொன்னா எல்லாம் சரியா போயிடுமா?

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.