(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அதற்குள் சக்தி பொறுமை இல்லாமல் ஹாரன் அடித்துக் கொண்டிருந்தாள்.

  

“என்ன உங்க ஃப்ரென்ட் ராம்போக்கு பொறுமையே இல்லை. அவங்களுக்கு பி.பி செக் செய்றது அவசியம். நான் சொன்னேன்னு சொல்லுங்க,” என்றான் சாந்ததுரை.

  

“கட்டாயம் சொல்றேன் ப்ரதர்,” என சொல்லி கிளம்பினாள் சத்யா.

  

அவள் ஜீப்பில் ஏறவும், வேகமாக ஜீப்பைப் கிளப்பிச் சென்றாள் சக்தி.

  

“ஸ்லோ, ஸ்லோ, ஸ்லோ சக்தி. எனக்கு இன்னும் கொஞ்சம் நாள் உயிர் வாழ ஆசையா இருக்கு,” என்றாள் சத்யா!

  

“சத்யா, இன்ஸ்பெக்டர் தேன் அஹல்யாவை ஸ்டேஷனுக்கு கூப்பிடுறார்னா புதுசா போலீஸ்க்கு லீட் கிடைச்சிருக்குன்னு அர்த்தம். அது என்னன்னு நமக்கு தெரியுறது முக்கியம். அதேப் போல அஹல்யா கிட்ட நேரா நடந்தது என்னன்னு நாம கேட்டு தெரிஞ்சுக்குறதும் முக்கியம். தேன் டென் ஓ க்ளாக் அஹல்யாவை வர சொல்லி இருக்கேன்னு சொன்னார். நமக்கு ஒன் ஹவர் கூட இல்லை. சீக்கிரமா போறது நம்ம எல்லோருக்குமே நல்லது.” வேகத்தை குறைக்காமல் கவனத்துடன் ஜீப்பை அந்த குறுகிய சாலையில் ஒட்டிக் கொண்டே சொன்னாள் சக்தி.

  

“எனக்கென்னவோ அதிகமா யோசிக்குறன்னு தோணுது சக்தி. அவர் பொதுவா விசாரிக்க தான் அஹல்யாவை வரச் சொல்லி இருப்பார்,” என்றாள் சத்யா யோசனை மின்ன.

  

“இருக்கலாம் சத்யா. ஆனால் இவ்வளவு நாள் இல்லாம இப்போ, இந்த லெட்டர் எல்லோருக்கும் வந்திருக்கும் போது ஸ்பெசிஃபிக்கா சொல்றது ரீசன் இல்லாம இருக்காது,” என தன் எண்ணத்தை பகிர்ந்தாள் சக்தி.

  

“அந்த மாதிரி யோசிச்சா, ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது சக்தி!”

  

“உனக்கு வந்த லெட்டர் பத்தி இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிட்டீயா சத்யா?”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.