(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“அப்படி சொல்லி இருந்தா அந்த லெட்டர் இன்னும் உன் கிட்ட இருக்க விட்ருப்பாரா அவர்? யாருக்கோ லெட்டர் வந்ததுக்கே என்ன மாதிரி கோபப் பட்டாருன்னு நீயும் தானே பார்த்த???”

  

"நான் அந்த லெட்டரை எடுத்துட்டு வந்து தரேன் சத்யா. நீ அதை இன்ஸ்பெக்டர் கிட்ட கொடுக்குறது நல்லது.”

  

“விளையாடுறீயா சக்தி? அப்புறம் அவர் என்னை ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிடுவார். நீ ஏதோ ஃப்ரென்ட் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னீயே, அதை செய்.”

  

“இல்லை சத்யா அது சட்டப்படி தப்பு! சரியில்லை.”

  

“உனக்கு வேண்டாம்னா கொடு. நான் என் கிச்சன் டப்பால போட்டு மூடி வைக்குறேன். அவர் கிட்ட எல்லாம் சொல்ல முடியாது. இப்போ அஹல்யா கிட்ட என்ன கேட்க போற சக்தி?”

  

“நான் இந்த அஹல்யாவை பார்த்ததே இல்லை. நீ சொல்றதை வச்சு இன் ஜெனரல் நல்லப் பொண்ணுன்னு அஸ்யூம் செய்திருக்கேன். இருந்தாலும் நேரா பேசினா எனக்கே ஒரு இம்ப்ரெஷன் வரும்.”

  

“இதுக்கா இப்படி வேகமா வந்த?”

  

ஜீப்பை பார்க் செய்த சக்தி அஹல்யாவின் எதிர் வீட்டை நோட்டமிட்டாள். சவீதா எட்டிப் பார்ப்பது தெரிந்தது.

  

“என்னமா ட்யூட்டி பார்க்குறாங்க! இவங்க எல்லாம் போலீஸ் ஃபோர்ஸ்ல சேர்ந்தா நம்ம நாடு எப்படியோ இருக்கும்.”

  

“போதும், இந்த போலீஸ் பாசம். சவீதா வந்து என்னைக் கூப்பிடுறதுக்கு முன்னால அஹல்யா வீட்டுக்கு உள்ளே போகலாம் வா!”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.