(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அப்படியே பாரதியையே அவனுக்கு ஊட்டி விட சொல்லி, அவளருகில் அமர்ந்து சாப்பிடவும் தொடங்கினான். கணவனின் அருகாமையில் சற்று முன் மனதில் ஏற்பட்டிருந்த காயம் அனைத்தும் பாரதிக்கு மறந்துப் போயிருந்தது...

  

ஆமாம், அம்மா அப்படி என்ன தனியா பேசனும்னு உன்னை கூப்பிட்டாங்க?”

  

ஆர்வத்துடன் ஒலித்த விவேக்கின் கேள்வி, சில நிமிடங்கள் பாரதி மறந்திருந்த உரையாடலை மீண்டும் அவளின் நினைவுக்கு கொண்டு வந்தது! கூடவே, அவளின் முகம் வாடவும் செய்தது...

  

என்ன ரதி? என்ன விஷயம்? ஏன் டல்லாகிற? அம்மா அப்படி என்ன கேட்டாங்க?”

  

விவேக் கேள்விகளை அடுக்குக் கொண்டே போகவும், அவனிடம் எதை எல்லாம் சொல்வது என மனதில் அவசரமாக யோசித்து விட்டு பேசினாள் பாரதி.

  

விவேக், அத்தைக்கு பாலா விஷயம் யார் மூலமாகவோ...”

  

அவள் பேசி முடிக்க கூட காத்திருக்காது,

  

ப்ச்... இது தானா?” என்றான் விவேக் அசிரத்தையாக!

  

அவன் சொன்ன விதத்தில் திகைத்துப் போய் பாரதி பார்க்க... ஒன்றும் சொல்லாமல் அவளின் கையை தன் கையால் அவனின் முகமருகே கொண்டு சென்று, அவள் கையில் வைத்து இருந்த உப்புமாவை விரும்பி வாங்கி சாப்பிட்டான் விவேக்... பாரதி அப்போதும் அமைதியாகவே இருக்கவும்,

  

இதுக்கு ஏன் ரதி இவ்வளவு அப்செட் ஆகிற?” என்றான்.

  

எப்படிங்க இதை அவ்வளவு ஈஸியா எடுத்துக்குறது? அத்தை ரொம்ப அப்செட் ஆகி இருக்காங்க...” என்றால் பாரதி தயக்கத்துடன்.

  

உன் கிட்ட ஹார்ஷா ஏதாவது சொன்னாங்களா?”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.