(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கண்டேன்...” என்றான் விவேக்!

  

கனவு! யாரு? நீங்க??”

  

நிஜம் ரதி... உன்னுடைய ஆனந்த் யாரு? கனவை எல்லாம் நனவாக்கும் சூராதி சூரன் ஆச்சே!!! அது தான் நாளைக்கு இந்த ரிஸார்ட் பயணம்...”

  

உங்களை...”

  

அதற்கு மேல் பாரதி பேச விவேக் விடவில்லை. அவளை தன்னோடு சேர்த்து அணைத்து முத்தமிட்டவன், அப்படியே அவள் கையில் இருந்த தட்டை வாங்கி மேஜை மீது வைத்தான்.

   

கணவனின் அணைப்பிலும் அன்பிலுமாக மற்றதை எல்லாம் மறந்துப் போனாள் பாரதி.

  

🌼🌸❀✿🌷

   

றுநாள், அந்த வீட்டில், மற்ற நாட்களைப் போலவே எல்லாம் நடந்தது... பாரதியும் கற்பகமும் மட்டும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அது மற்றவர்களின் கவனத்தில் வருமாறு இருவருமே காட்டிக் கொள்ளவில்லை. விஷயம் ஓரளவிற்கு தெரிந்திருந்த உமா மட்டும் அவர்கள் இருவரும் பேசாமல் இருப்பதை கவனித்தாள். அவள் அதை கண்டுக் கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவளின் மனதில் மட்டும் பெரிய பாரம் ஏறி இருந்தது!

  

🌼🌸❀✿🌷

   

தி, எல்லாம் ரெடியா?” பாரதி இருந்த திசையில் பார்த்துக் கேட்டான் விவேக்.

  

ரெடிங்க...” என்று சொல்லிக் கொண்டே அவன் நின்ற இடத்திற்கு வந்தாள் பாரதி.

  

கிளம்புறதுக்கு முன் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... என்னன்னு கெஸ் செய் பார்ப்போம்?”

  

ஊஹும்ம்... தெரியலையே... ஏதாவது க்ளூ கொடுங்க...”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.