“ம்ம்ம்... உன் சம்மந்தப் பட்ட விஷயம், உனக்கு பிடிச்ச விஷயமும் கூட...”
“ம்ம்ம்...??”
“என் மக்கு ரதி...”
“யார் நானா மக்கு?”
“பின்னே வேற யாரு? காலேஜ்ல லெக்சர் கொடுக்குறதுல மட்டும் தான் நீ எக்ஸ்பர்ட். மீதி எல்லாத்திலேயும் ஜீரோ தான்... உனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தே எனக்கு நாள் போகுது...”
சலித்து கொண்ட விவேக்கைப் பார்த்து கோபத்துடன் முறைத்தாள் பாரதி. அவளின் கோப பார்வையை கண்ட விவேக்கின் கண்கள் மின்னியது! விஷயம் புரிந்து, முகத்தை திருப்பிக் கொண்டு நகர முயன்றவளின் வலதுக்கரத்தை பிடித்து இழுத்து அணைத்த விவேக்,
“அதுக்குள்ள கோபமா? எவ்வளவு நாள் ஆச்சு நீ இப்படி என்னை அப்படி முறைச்சு பார்த்து? எனக்கு ரொம்ப பிடிச்ச பாஆஆரதியோட பார்வை அது...!!!” என்றான் கேலியாக!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...