”சே இவள்கிட்ட நல்ல பேர் எடுக்கலாம்னு பார்த்தா ஒவ்வொரு முறையும் எனக்கு அவமானம்தான் மிஞ்சுது”
”இப்ப நடந்ததுக்கு நீ காரணம் இல்லையே எதுக்கு வருத்தப்படற சரி வா தூங்கலாம்”
”இதை என்னடா செய்றது”
”என்னத்த செய்றது உன் முறைபொண்ணு உனக்கு ஒத்துழைப்பா இருந்திருந்தா இது உனக்கு பயன்பட்டிருக்கும், அதான் இல்லையே இதுக்கு இப்போதைக்கு வேலையில்லை பொறு கொஞ்ச காலம் கழிச்சிப் பார்க்கலாம், அதுவரைக்கும் பத்திரமா வைச்சிருக்கலாம்“
”அடச்சே தூக்கி போடுடா இதை”
”இருப்பா நல்ல நாள் அதுவுமா முதல் முறையா இதை நீ வாங்கியிருக்க இதோட ராசி இன்னிக்கு இல்லைன்னாலும் இன்னொரு நாள் ஒர்க் அவுட் ஆகும் பாரு”
”இது என்கிட்ட இருந்ததுன்னு தெரிஞ்சது என் முறைபொண்ணு சொன்னது போல என் முகத்தில ஆசிட் ஊத்திடுவா”
”சரி நான் வைச்சிக்கிறேன் என்னிக்கு உனக்கு முறையா முதலிரவு நடக்குதோ அன்னிக்கு தரேன் போதுமா”
”என்னவோ செய் போ” என சொல்லிய கொம்பன் ஹாலில் ஒரு இடமாக படுத்து உறங்க ஏற்பாடு செய்ய அதே நேரம் சண்முகம் வந்தார், அவரும் கையில் பாய் தலையணையுடன் வரவே இவர்கள் குழம்பினார்கள்
”மாமா இங்க என்ன செய்றீங்க தூங்கலையா நீங்க” என கொம்பன் கேட்க
”மாப்பிள்ளை நடந்ததை எல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன், வீட்டு மாப்பிள்ளை