(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 01 - சசிரேகா

முன்னுரை

  

இரு தோழிகளுக்கும் நாயகன் ஒருவனே. ஆனால் அந்த நாயகனுக்கு எந்த தோழி தனது வாழ்க்கை துணைவி என்பது தான் கேள்வி. அதற்கான பதில் அவர்கள் மூவரின் கையில்தான் உள்ளது. இரு தோழிகளின் வாழ்க்கையில் நாயகனுடன் நடக்கும் நிகழ்வுகளே இக்கதையாகும்.

  

பாகம் 1

  

கோவை

  

கோவலன் கலைக்கல்லூரியின் பிரின்சிபால் உதயமூர்த்தி வெகுநேரமாக பஸ்ஸ்டாப்பில் காத்திருந்தார். நிமிடத்திற்கு ஒரு முறை தனது கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தபடியே அக்கம் பக்கம் நோட்டமிட்டார். முழுதாக 10 நிமிடங்கள் கடந்த நிலையில் ஒரு அம்பாசிடர் வண்டி அவரின் பக்கம் வந்து நிற்க உதயமூர்த்தி பவ்யமாக பின்பக்கம் இருந்த ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்து கைகூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டே முன் பக்க சீட்டில் ஏறி அவர் அமர்ந்ததும் வண்டி புறப்பட்டது.

  

டிரைவர் இருக்கும் காரணத்தால் அங்கு யாரும் பேசாமல் அமைதி நிலவியது. உதய மூர்த்தியின் முகம் கலவரமாக இருந்தது ஈஸ்வர மூர்த்தியின் முகம் கவலையாக இருந்தது. வண்டியோ கூட்டமே இல்லாத சாலையில் பயணித்தது. ஈஸ்வரமூர்த்திக்கு இருந்த ஒரு கெஸ்ட் ஹவுஸ்க்குள் வண்டி சென்று நின்றது.

  

வண்டி நின்றதும் வாட்ச்மேன் ஓடிவந்து கார் கதவை திறக்க வண்டியில் இருந்து ஈஸ்வரமூர்த்தி இறங்கினார். அடுத்து உதயமூர்த்தியும் இறங்கினார் ஈஸ்வர மூர்த்தியோ வாட்ச்மேனிடம்

  

”யாரையும் உள்ள விடாத” என அதிகாரமாகச் சொல்ல அவனும் பவ்யமாக கேட்டுக் கொண்டான், டிரைவரும் வண்டியை ஓரமாக ஷெட்டில் நிப்பாட்டிவிட்டு ஓய்வெடுத்தான், உதயமூர்த்தியும் ஈஸ்வரமூர்த்தியும் வீட்டிற்குள் சென்றார்கள். இதேபோல அவர்கள் இருவரும் பலமுறை இங்கு வருவதுண்டு செல்வதுண்டு, ஏதேனும் முக்கியமான விசயம் இருந்தால்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.