மட்டுமே இங்கு வருவார்கள் இப்போதும் தலைபோகும் அளவு பிரச்சனை வந்த பின்புதான் உதயமூர்த்தி ஈஸ்வரமூர்த்தியிடம் விசயம் சொன்னார். அதைக்கேட்டதில் இருந்து ஈஸ்வரமூர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை
”என் பேரன் கோவலனை நம்பி கல்லூரியை பார்த்துக்கற பொறுப்பை தந்திருக்க கூடாது, ஏதோ படிச்சிருக்கான் நமக்கும் வயசாயிடுச்சி, அவனாவது நல்லபடியா பார்த்துக்குவான்னு நம்பி தந்தா இப்படி செய்றானே, எனக்கு அவனை நினைச்சா கோபமா வருது, கல்லூரியோட நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு” என வருத்தப்பட்டார். அதற்கு உதயமூர்த்தியோ
”என்னதான் தம்பி படிச்சிருந்தாலும் வெளிநாட்டுல தானே படிச்சாரு, அங்க இருந்த பழக்கம் இங்கயும் விடலை, அங்க இருக்கற கல்லூரிகளை போல நம்ம கல்லூரியை மாத்தினாரு அதனால என்னாச்சி படிக்கற மாணவர்கள் ஒழுக்கம் கெட்டதுதான் மிச்சம், நானும் தம்பிகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் கேட்க மாட்டேங்கறாரு, நல்ல பெயர் எடுத்த கல்லூரி இப்போ இந்த கல்லூரியை பத்தி ஊரே தப்பா பேசற அளவுக்கு கொண்டு வந்துட்டாரு.
மாணவர்களோட எண்ணிக்கையும் குறைய ஆரம்பிச்சிடுச்சி, 5 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாமே நல்லாயிருந்தது, இந்த 5 வருஷத்துல எல்லாமே மாறிடுச்சி, பேரன்ட்ஸ் கூட நம்பி அவங்க பிள்ளைகளை நம்ம கல்லூரியில சேர்க்க மாட்டேங்கறாங்க, இப்படியே போனா அடுத்த வருஷம் யாருமே வரப்போறதில்லை இருக்கற மாணவர்களை வைச்சி கல்லூரி நடத்தினா கூட இன்னும் இரண்டு வருஷத்தில கல்லூரியே காலியாயிடும் அப்புறம் கல்லூரியை இழுத்து மூட வேண்டியதுதான்” என சொல்ல கலங்கிப் போனார் ஈஸ்வரமூர்த்தி
”அப்படி நடக்ககூடாது அந்த கல்லூரியை நான் தொடங்கினப்ப பல கனவுகளோட ஆரம்பிச்சேன், நிறைய கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில அந்த கல்லூரியை வழிநடத்தி பெரிசாக்கினேன், என்னோட அயராத உழைப்பு காரணமா கல்லூரிக்கு பேர் புகழ் கிடைச்சது. கோவலன் பிறந்தப்பதான் அந்த கல்லூரி கட்ட ஆரம்பிச்சதால அவனோட பெயரையே வைச்சாச்சி, இப்ப அந்த கல்லூரிக்கு வயசு 30, இன்னும் பல வருஷம் அந்த கல்லூரி நடக்கனும் பல மாணவர்களை பெரிய ஆளுங்களா ஆக்கி அனுப்பனும்னு ஆசைப்பட்டேன், ஆனா என் ஆசையில இப்படி மண் விழுந்துப் போச்சே”
”சொன்னா கோச்சிக்க கூடாது”