”அட நீ ஒண்ணு, யார் நீ? என்னோட உயிர் நண்பன், நான் படற கஷ்டத்தில பாதி பங்கு உனக்கும் இருக்கு, கல்லூரி கட்டற காலத்தில இருந்தே நீ என்கூட இருக்க, மாணவர்களுக்கு பாடம் எடுத்து படிப்படியா இப்ப பிரின்சிபால் வரைக்கும் வந்துட்ட, உன்னை நம்பி அந்த கல்லூரியை ஒப்படைச்சப்ப நான் கொஞ்சம் கூட கல்லூரியை நினைச்சி கவலைப்பட்டதில்லை, எல்லாம் நீயிருக்க பார்த்துக்குவன்னுதான் நம்பி விட்டேன், நீயும் கல்லூரியை நல்லமுறையில் பார்த்துக்கிட்ட ஆனா இப்ப என் பேரனால அந்த கல்லூரி அழியறதைப் பார்க்க என்னால முடியலை இதுக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லு செய்றேன்”
”தம்பிக்கு ஏற்கனவே கம்பெனி வேலைகள் கொடுத்துட்டீங்க, அதை அவர் பார்த்துக்கட்டும் மறுபடியும் நீயே தாளாளரா வந்துடு”
”எனக்கு முன்ன மாதிரி உடம்புல தெம்பு இல்லை, சுகர் ஜாஸ்தியாயிடுச்சி, அடிக்கடி மயக்கம் வருது டாக்டர் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு, இல்லைன்னா நானே கல்லூரிக்கு வந்திருப்பேனே என்ன செய்றது என் நிலைமை இப்படியாயிடுச்சி” என வருந்த
”ஈஸ்வரா வருந்தாத, இப்பவும் எதுவும் கைமீறிடலை, உன் பேரன்கிட்ட கல்லூரியோட நிலைமையை எடுத்துச் சொல்லிப் பாரேன்“
”அவன் எங்க என் பேச்சைக் கேட்கறான், வெளிநாட்டுல படிச்சிட்டு வந்த உடனே கம்பெனியை ஆரம்பிச்சான் கூடவே கல்லூரியை பார்த்துக்க சொன்னதால பார்த்துக்கறான், கல்லூரியே இந்த லட்சணத்தில நடத்தறானே அவனோட கம்பெனி எந்த லட்சணத்தில இருக்குன்னு தெரியலையே, இதைப்பத்தி கேட்டா கத்துவான் திட்டுவான், வர வர அவனோட கோபம் அதிகமாகுது அவனை எப்படி சரியாக்கறதுன்னு தெரியலை”
”அப்பா அம்மா இருந்திருந்தா தம்பி நிலைமை இந்தளவுக்கு மோசமாயிருந்திருக்காதுன்னு நினைக்கிறேன்”
”ஆஆ என்ன செய்றது, 10 வருஷத்துக்கு முன்னாடி கார் விபத்துல இறந்துப்போயிட்டாங்க அதுல என் மனைவியும் இறந்துட்டா இப்ப நானும் தனியாளாயிட்டேன், என் பேரனும்