அநாதையாயிட்டான். எனக்கு அவன் துணை அவனுக்கு நான் துணைன்னு அப்படியே நாட்கள் ஓடுது”
”பேசாம தம்பிக்கு ஒரு கல்யாணம் செய்து வைச்சிட்டா என்ன”
”இதைப்பத்தி ஏற்கனவே அவன்கிட்ட பேசியாச்சி, காதுலயே வாங்கிக்க மாட்டேங்கறான், கல்யாணம் வேணாம்னு முடிவா இருக்கான், அவனை எப்படி சரியாக்கறதுன்னு தெரியலை அவனை நினைச்சே எனக்கு இன்னும் உடம்பு மோசமாகுது”
”டென்ஷன் வேணாம், தம்பிக்கு ஏதோ ஒரு லட்சியம் இருக்குப் போல, அதான் இப்படி நடந்துக்கறாப்ல இல்லைன்னா அவருக்கு பிடிச்ச பொண்ணு இன்னும் வரலை போல அப்படி யாராவது இருந்தா கண்டிப்பா அவர் கல்யாணம் செய்துக்குவாப்ல, இப்ப கல்லூரி விசயத்துக்கு வரலாம்”
”கல்லூரியோட நிலைமை படுமோசமா இருக்குது, என்ன செய்றதுன்னு தெரியலையே உன்கிட்ட ஏதாவது யோசனை இருக்கா சொல்லு”
”புதுசா யாரையாவது வேலைக்கு வைச்சா என்ன”
”வேலைக்கா என்ன வேலைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லையா“
”அதுக்கென்ன நிறைய ஆளுங்க இருக்காங்க, அவங்க சரியாவும் பாடம் எடுக்கறதில்லை, அப்படியே எடுத்தாலும் மாணவர்கள் கவனிக்கறதில்லை, நானும் எல்லா ப்ரபொசர்களையும் மாணவர்களையும் கூப்பிட்டு ஆடிட்டோரியத்தில வைச்சி பேசிட்டேன், என் பேச்சுகூட அவங்க காதுல விழலையே”
”சரி இப்ப என்ன செய்யலாம்ங்கற”
”எனக்கும் வயசாகுது நான் எப்ப ரிட்டயர்டு ஆகறது”
”என்ன விளையாடறியா, கல்லூரி மோசமான நிலைமையில இருக்கறப்ப நீயும் கல்லூரியை