ஒத்துவராது”
”எல்லாம் வரும் நீ வேணா அந்த பொண்ணை பாரு”
”என்னது பொண்ணா”
”ஆமாம்”
”விளையாடாத நம்ம கல்லூரியே ஆண்கள் மட்டும் படிக்கற கல்லூரி, அங்க இருக்கற ஆளுங்க பாடம் சொல்லித்தர்றவங்க எல்லாருமே ஆண்கள்தான், இதுல ஒரு பொண்ணை எப்படி பிரின்சிபாலா ஆக்கறது, அப்படியே ஆக்கினா அந்த பொண்ணுக்குதான் பிரச்சனையே அவள் சொல்றதை யாரும் காதுல ஏத்துக்க மாட்டாங்க“
”சொல்ற விதத்தில சொன்னா கண்டிப்பா ஏத்துப்பாங்க“
”ரிஸ்க் எடுக்க வேணாம் என் பேரனுக்கு இதெல்லாம் பிடிக்காது”
”இதப்பாரு ஈஸ்வரா, அது நீ ஆரம்பிச்சி வைச்ச கல்லூரி உன்னோடது, உன் பொறுப்பு, நீ எடுக்கறதுதான் சட்டம், உன் பேரனுக்காக கல்லூரியை இழந்துடாத அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என சொல்ல ஈஸ்வரமூர்த்தி பலமாக சிந்திக்கலானார்.
முழுதாக கால் மணி நேரம் எடுத்துக் கொண்டார் பலவிதமாக யோசித்து முடித்ததில் முடிவாக
”சரி நீ சொல்றதுக்கு நான் கட்டுப்படறேன், ஆனா நான் அந்த பொண்ணை பார்க்கனுமே“
”வர சொல்றேன்”
”வேணாம் நானே நேர்ல போய் அவளைப் பார்க்கிறேன் அப்படி என்ன அவள்கிட்ட திறமையிருக்குன்னு தெரிஞ்சிக்கறேன்”
”அவ்ளோதானே இப்ப என்ன மணி 11, கண்டிப்பா அவள் பள்ளியிலதான் இருப்பா, கிளம்பு வா