போய் நேரா அவளைப் பார்த்துட்டு வரலாம்” என சொல்ல ஈஸ்வரமூர்த்தி சரியென தலையாட்டிவிட்டு கிளம்பினார்.
இவ்விருவரும் வண்டியில் கிளம்பி நேராக சென்றது ஒரு தனியார் பள்ளிக்குதான்.
பள்ளி கேட் மூடியிருக்க வண்டி வந்ததும் வாட்ச்மேன் கேட்டை திறந்தான், வண்டி உள்ளே நுழைந்தது. அந்த வண்டியை ஏற்கனவே சிலர் தெரிந்து வைத்திருந்தார்கள், ஈஸ்வரமூர்த்தி பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கறது, ப்யூன் ஓடிவந்து கார் கதவை திறந்தான். ஈஸ்வரமூர்த்தி இறங்கினார், கூடவே உதய மூர்த்தியும் இறங்கினார்.
ப்யூனோ பவ்யமாக அவர்களை அழைத்துக் கொண்டு ஹெச் எம் அறைக்குச் சென்றான். ஹெச் எம்மோ ஈஸ்வரமூர்த்தியைக்கண்டதும் இருக்கையை விட்டு எழுந்து மரியாதையாக வணக்கம் வைக்க ஈஸ்வரமூர்த்தியும் பதிலுக்கு கைகூப்பி வணக்கம் சொல்ல அவரை இருக்கையில் அமர சொன்னார், அதில் அவரும் உதயமூர்த்தியும் இருக்கையில் அமர்ந்தார்கள்.
”நீங்க எவ்ளோ பெரிய ஆளுங்க எங்க பள்ளிக்கு நீங்க வந்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி என்ன சாப்பிடறீங்க, ஜூஸ், காபி, டீ” என சொல்ல ஈஸ்வரனோ
”எனக்கு சுகர் இருக்கு வேணாம்” என சொல்ல உதயமூர்த்தியும்
”எனக்கும் வேணாம் இப்பதான் பிபி மாத்திரை சாப்பிட்டேன்”
”அப்படியா அய்யோ நீங்க இங்க வந்திருக்கீங்க உங்களை எப்படி கௌரவிக்கறதுன்னு தெரியலையே”
”அதெல்லாம் பரவாயில்லை நாங்க வந்ததே வேற விசயமாதான்”
”சொல்லுங்க என்ன விசயம் எங்களால ஏதாவது காரியம் ஆகனுமா”
”ஆமாம் உங்க பள்ளியில வேலை பார்க்கற ஒரு டீச்சரை பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்கோம்” என ஈஸ்வரன் சொல்ல ஹெச்எம்மோ