”ஓஹோ அப்படியா பரவாயில்லைங்க சார், பள்ளி நேரம் முடிஞ்சதும் கேட் திறப்பாங்க, அப்ப எல்லா மாணவ மாணவர்களும் வெளிய வருவாங்க, நான் சொல்லவேண்டிய கருத்தை ரோட்ல வைச்சி எல்லா மாணவர்கள்கிட்டயும் சொல்லிடறேன்” என சொல்ல ஹெச்எம் அதிர்ந்தார்
“அய்யோ கண்ணகி அப்படி ஒரு காரியத்தை செய்துடாத மானம் போயிடும் பள்ளியோட பேர் கெட்டுடும்”
”எனக்கு மாணவர்களோட ஒழுக்கம்தான் முக்கியம் அவங்களோட எதிர்காலம்தான் முக்கியம்”
”போதும் எப்ப பாரு உன்னால பிரச்சனைதான் எனக்கு, நீ பாட்டுக்கு எதையாவது செய்துடற கடைசியில நான்தான் அதுல மாட்டி கஷ்டப்படறேன், நீ அமைதியாவே இருக்க மாட்டியா உனக்கு கொடுக்கற சம்பளத்துக்கு பள்ளிக்கு வந்தோமா பாடம் எடுத்தேமான்னு இருக்கனுமே தவிர இப்படி ஒவ்வொரு மாணவனையா பார்த்து திருத்தக்கூடாது“
”சார் ஆசிரியர்னா என்ன அர்த்தம் சார், வெறும் பாடம் சொல்லிக் கொடுக்கறது மட்டும்தானா, இல்லை சார் இல்லை நம்ம கிட்ட படிக்கற மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்கனும் சார், பள்ளிங்கறது ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆணிவேர் போல இங்க இருந்து ஒழுக்கத்தை கத்துக்கிட்டாதான் பெரியாளான பின்னாடி நல்லவனா இருப்பான், பள்ளிதானே சார் எல்லாத்துக்குமே ஆதாரம், இங்கு இருந்து எத்தனை மாணவர்கள் எத்தனை மாணவிகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி டாக்டராவோ, இன்ஜினியராவோ, சயின்டிஸ்டாவோ, வக்கீலாவோ, ஜட்ஜாவோ ஆகறாங்க, அப்படிப்பட்டவங்களை உருவாக்கறது யாரு நம்மளை போல இருக்கற ஆசிரியர்கள்தானே, நாமளே நம்ம வேலையை மட்டும் பார்த்தா போதாது சார் மாணவர்களுக்கு பாடத்தை கடந்து எல்லாத்தையும் சொல்லிக்கொடுக்கனும் சார்”
”அதுக்கெல்லாம் யார் சம்பளம் தர்றது“
”நான் இலவசமா சொல்லிக் கொடுக்கறேன் எனக்கு சம்பளம் கூட வேணாம்“
”போதும் கண்ணகி நீ ஒருத்திதான் என்னவோ நல்ல ஆசிரியர்ன்னு பேர் எடுக்க இப்படி