புத்தகத்தை வைச்சி படிக்கற, பொண்ணா நீ” என திட்ட அவரை தடுத்தாள் கண்ணகி
”நிறுத்துங்க சார் தப்பு அவள் மேல இருந்தாலும் அவளுக்கு இதை படிக்க தூண்டினது அவளோட அப்பாதான் சார்”
”என்னம்மா சொல்ற”
”ஆமாம் வயசு பொண்ணு வீட்ல இருக்கறப்ப பெத்தவங்க ஒழுக்கமா இருக்கனும், அதைவிட்டுட்டு அவங்களே தப்பான வேலைகளை செய்தா பாவம் இவங்களுக்கு என்ன தெரியும், அப்பா செய்றது சரின்னு அதை இவங்க செய்றாங்க, இந்த புக்கெல்லாம் அவரோடது இந்த வயசுல அவர் இதை நைட்டானா படிக்கறாரு, அதை இவள் பார்த்திருக்கா அப்படி என்னதான் இருக்குது இதுலன்னு தெரிஞ்சிக்க அவளும் ஒரு நாள் படிச்சிருக்கா, படிக்க படிக்க ஆர்வம் வந்திருக்கு, பள்ளி படிப்புல இருக்கற கவனம் போயிடுச்சி, நல்லா படிச்சி முதல் ரேங்க் வாங்கின பொண்ணு இப்ப பெயில் ஆகறா, இதுக்கு காரணம் யாரு அவளா இல்லை அவளோட பேரன்ட்ஸா, சொல்லுங்க சார், பொண்ணு இருக்கற வீட்ல எப்படி நடந்துக்கனும் ஒவ்வொரு பொண்ணுக்கும் அவளோட அப்பாதான் ரோல்மாடல் சார், ஹீரோ போல பார்ப்பா அப்படியிருக்கறப்ப இவர் எப்படி நடந்துக்கனும் சொல்லுங்க“
”அதுக்காக கண்டிக்கறதை விட்டுட்டு அவங்களை அடிப்பியா”
”நான் முதல்ல அவங்களை கூப்பிட்டு கண்டிச்சேன், ஆனா அவரு தன் மானம் போகுதேன்னு பொண்ணை அடிக்க பார்த்தாரு, எனக்கு கோபம் வந்தது தப்பு செய்தது நீ உன் பொண்ணு பாவம் சின்ன பொண்ணு விவரமில்லாதவ, அவளை எப்படி நீ அடிக்கலாம்னு அவரை நான் அடிச்சேன், இது தப்புன்னு எனக்கு தோணலை சார், நான் செய்ததுதான் சரி மாணவர்கள் கெட்டுப் போறதுக்கு முக்கால் வாசி காரணம் அவங்க வீட்டு சூழ்நிலையாதான் இருக்கும், மீதி சுற்றுச்சூழலா இருக்கும், வீடு ஒழுங்கா இருந்தா மாணவர்களும் ஒழுக்கமா இருப்பாங்க” என சொல்ல ஹெச் எம்முக்கு என்ன சொல்வதென தெரியவில்லை
”கண்ணகி இந்த விசயத்தை இப்படியே விட்டுடுங்க பெரிசு பண்ண வேணாம்”