”உன்கிட்ட இனி பேசி ஜெயிக்க முடியாது நீ கண்ணகியாச்சே, உனக்கு தப்பு நடந்தாலே பிடிக்காது, அதை யார் செய்தாலும் நீ தண்டிக்காம விடமாட்ட, உன்கிட்ட இவ்ளோ நேரம் பேசியும் நீ புரிஞ்சிக்கலைன்னா அப்புறம் உன் இஷ்டம், நீ செய்றதை செய் ஆனா ஒரு விசயத்தை சொல்றேன் நல்லா கவனி“
”என்னது சார்”
”இன்னியோட உன் வேலை முடிஞ்சது நாளைக்கு நீ இந்த பள்ளிக்கு வரவேணாம்” என சொல்ல கண்ணகி மெல்ல சிரித்து
”சரிங்க சார்”
”உன் வேலை போயிடுச்சிங்கறேன் நீ சிரிக்கற, கஷ்டமாயில்லை“
”இல்லை சார் உங்களை நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு”
”என்ன உளர்ற“
”ஆமாம் சார் பள்ளி ஒழுக்கமா இருக்கனும்னு நினைக்கற என்னை வேலை விட்டு எடுத்துட்டீங்க, நாளைக்கே இந்த பள்ளி ஒழுக்கமில்லாம போனா அதனால வர்ற கெட்ட பேருக்கு நீங்கதான் பொறுப்பாவீங்க சார்”
”அப்படி ஒரு விசயம் நடக்காது நான் பார்த்துக்கிறேன்”
”நீங்க இருக்கறப்பவே இதோ இப்படி நடக்குதே சார்”
”இனிமேல நடக்காது“
“ஓகே நான் பிரேயர் பெல்லை அடிக்கிறேன், மாணவர்களை அசம்பிள் செய்றேன் நான் சொல்ல