”முடியாது இதைபத்தி நான் பிரேயர்ல எல்லா மாணவ மாணவிகள்கிட்டயும் பேச போறேன்”
”ஏன்“
”ஆமா இந்த பொண்ணு தானும் படிக்கறதோட விடாம தன் தோழிகளையும் சேர்த்து வைச்சிக்கிட்டு படிச்சிருக்கா, இவள் கெட்டதோட இல்லாம மத்தவங்களும் கெட்டுப் போறாங்க, அதை தடுக்க வேணாமா இப்பவே நான் எல்லா மாணவர்களையும் அசம்பிள் பண்ணி வைக்கப் போறேன் சார்”
”நிறுத்தும்மா நிறுத்து, யார் தப்பு செய்தாங்களோ அவங்களை கூப்பிட்டு கண்டிக்கலாம் அதுக்காக பிரேயர்ல வைச்சி இதை பத்தி பேசினா அவ்ளோ நல்லாயிருக்காது”
”இதை அவசியம் எல்லா மாணவர்களும் தெரிஞ்சிக்கனும் சார், தப்பை முளையிலயே கிள்ளி போட்டுடனும் சார் யாருக்கு தெரியும், இந்த பள்ளியில படிக்கற மத்த பசங்கள்ல எத்தனை பேரு இதுபோல தப்பை செய்றாங்கன்னு, அவங்க செய்ற தப்பு வெளிய தெரியறவரைக்கும் காத்திருக்க முடியாது சார், இப்பவே எது நல்லது எது கெட்டதுன்னு எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கனும் புரியவைக்கனும் சார், அது நம்மளை போல இருக்கற ஆசிரியர்களோட கடமை”
”ப்ச் இப்படி செய்தா நம்ம பள்ளிக்கு கெட்டப்பேர் வந்துடும்“
“சார் அதைபத்தி யோசிச்சா மாணவர்கள் எதிர்காலம் பாழாயிடும் சார்”
”ஒருத்தர் தப்பு செய்தா அதுக்காக இவ்ளோ பெரிய வேலை செய்யனுமா”
”தப்பு சின்னதோ பெரிசோ அதை முதல்லயே தடுக்கனும் விட்டா அதே தப்பு பெரிசாகி மாணவர்களோட வாழ்க்கையையே அழிச்சிடும் சார்”
”நீ ஒரு டீச்சர் உன் வேலையை மட்டும் பாரு, நான் இந்த பள்ளியோட ஹெச்எம் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன் போ போய் உன் வகுப்பை பாரு”