(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

கிளம்பி வந்துட்டேன்”

  

”ப்ச் இது தப்பு மாதவி, இப்படி நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்டா உன் டீம்ல இருக்கறவங்க நிலைமை என்னாகும் சொல்லு, பாவம் அவங்க, உன்னை நம்பியிருந்தவங்களை இப்படியா அம்போன்னு விட்டு வர்றது”

  

”என்னால முடியலை கண்ணகி”

  

”தப்பு மாதவி, கிளம்பு போ, உன் டீம் ஆளுங்களுக்கு நீதான் துணையா நிக்கனும் நைட்டானாலும் சரி இருந்து அந்த வேலையை முடிச்சிட்டு வா”

  

”நீயுமா ப்ச் முதலாளிக்கு பயந்து செய்யச் சொல்றியா”

  

”கண்டிப்பா இல்லை மாதவி உன் டீம் ஆளுங்களுக்காக சொல்றேன்”

  

”என்னவோடி நான் வந்தே அரை மணி நேரம்தான் ஆகுது அதுக்குள்ள போங்கற இப்ப நான் போனாலும் ஒரு நாள் வேலை போனது போனதுதானே”

  

”வேலை போனா போகுது உன் மேல வைச்சிருக்கற நம்பிக்கை ஒரு நாளும் போக கூடாது கிளம்பு போ” என விரட்ட மாதவி நொந்தபடியே கிளம்ப

  

”இதப்பாரு எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சரி அந்த ப்ராஜெக்டை முடிச்சி உன் முதலாளிக்கிட்ட கொடுத்துட்டுதான் வரனும் சொல்லிட்டேன் ஆமா” என்றாள் கண்ணகி

  

”இல்லைன்னா என்ன செய்வ வழக்கம் போல உன் பேச்சைக் கேட்கலைன்னதும் 2 நாள் பேச மாட்ட அதானே“

  

”இந்த முறை 2 நாள் இல்லை 5 நாள் பேச மாட்டேன்“

  

”அய்யோ அப்படி செய்யாத எனக்குன்னு இந்த உலகத்தில இருக்கற ஒரே உறவு நீதான் நீயும் என்கூட பேசலைன்னா நான் பைத்தியமாயிடுவேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.