“கோவலன் கலைக்கல்லூரி தெரியுமா”
”தெரியும் சார்”
”அந்த கல்லூரியோட பிரின்சிபால் நானு”
”ஓ அப்படியா மன்னிக்கனும் சார் எனக்கு நிஜமாவே தெரியாது”
”உனக்கு தெரியாம போனது என்னோட துரதிர்ஷ்டம்”
“அப்படி சொல்லாதீங்க நான் வேலையில கவனமா இருந்துட்டேன் அவ்ளோதான்”
”சரி பரவாயில்லை உன்னை தேடி உன் பள்ளிக்கு போனேன்”
”எதுக்காக சார்”
”என் கல்லூரியில ஒரு வேலையிருக்கு அதை நீ செய்தா சரியா வரும்னு நினைச்சேன்”
”வேலையா முதல்ல என்னை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்”
”என் பக்கத்து வீட்டு பொண்ணு உங்க ஸ்கூல்லதான் படிக்கிறா அவளுக்கு ஒரு முறை பிரச்சனை வந்து அதை சுலபமா நீ தீர்த்து வைச்ச, உன்னைப் பத்தி அவள் நிறைய விசயம் சொன்னா உனக்கு திறமையிருக்கு, அந்த திறமைக்கு ஏத்த வேலை கோவலன் கலைக்கல்லூரியிலதான் இருக்கு, அதான் நானே உன்னை தேடி வந்தேன்”
“ஆச்சர்யமா இருக்கு சார், இப்படியெல்லாம் தேடி வந்து வேலை தர்ற அளவுக்கு நான் எதையும் செய்யலையே”
”இன்னிக்கு பிரேயர்ல உன்னைப் பார்த்தேன் நீ பேசினதை கேட்டேன் உன் வேலை போனதும்