உதயமூர்த்தியோ போன் மூலம் ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினார்
”உண்மையாவா சொல்ற”
”அட சத்தியமா எந்த விபத்துல உன் புள்ளையும் மருமகளும் இறந்தாங்களோ அதே விபத்தில கண்ணகியோட அப்பா அம்மாவும் இறந்துட்டாங்க”
”அப்போ அன்னிக்கு நடந்த விபத்துல எதிர்எதிர்ல வந்து கார் முட்டி விபத்தானது இவங்களோடதுதானா”
”ஆமாம் ஒரு நிமிஷம் நானே ஆடிப்போயிட்டேன்”
“சரி இந்த விசயத்தை இதோட மறந்துடு நான் பார்த்துக்கிறேன்”
”நாளைக்கு காலையில 9 மணிக்கு கண்ணகியை கல்லூரிக்கே வரசொல்லியிருக்கேன்”
“நான் பார்த்துக்கிறேன்”
”எப்படியோ அந்த கல்லூரியை சரியாக்கற வழி கிடைச்சிடுச்சி”
”இந்த வீட்டை சரியாக்கற வழியும் நாளைக்கு கிடைக்கும்”
”அவசரப்படாத, விபத்து பத்தின உண்மை தெரிஞ்சா கண்ணகி நிச்சயம் உன் வீட்டுக்கு உரிமையோட வரமாட்டா”
”சொன்னாதானே”
”அப்போ பொய் சொல்லப்போறியா”