Page 31 of 36
“அப்படியெல்லாம் இல்லை”
”எது எப்படியோ வேலை கிடைச்சதே, என்ன வேலை கண்ணகி”
”பிரின்சிபால் வேலை” என சொல்ல மாதவி சாப்பிட்டபடியே பொரை ஏறி இருமினாள்
”பிரின்சிபாலா“
”ஆமாம் கோவலன் கலைக்கல்லூரிக்கு பிரின்சிபால் வேலை”
”என்னால இதை நம்ப முடியலை”
”என்னாலயும்தான் நாளைக்கே கல்லூரிக்கு போய் தாளாளரை பார்க்கனும்”
”அந்த தாளாளர் யார்ன்னு தெரியுமா உனக்கு”
“தெரியாது பார்த்தாதான் தெரியும்”
”கோவலன்”
”யார் அவரு”
”கல்லூரி தாளாளர் அதோட”
”அதோட”
”என் கம்பெனி முதலாளியும் அவர்தான்”
”ஓ சூப்பர் அப்ப தாளாளரை பத்தி உனக்கு நிறைய தெரிஞ்சிருக்குன்னு சொல்லு”