(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”அப்ப உனக்கு இந்த வீட்ல இடம் இல்லை வெளிய போ” என சொல்ல உடனே அவன் பலமாக யோசித்தான்.

  

எப்போதும் அவனிடம் ஒரு ரூபாய் நாணயம் இருக்கும் சிறுவயிதில் இருந்தே அவனுக்கென ஒரு தனி குணம் உண்டு. தாய் தந்தை இருந்தவரை ஏதாவது ஒரு விசயத்திற்கு முடிவு எடுக்க திணறும் போது அவர்களிடம் உதவி கேட்பான், அவர்களும் சிறந்த வழியை காட்டுவார்கள், அவர்கள் இறந்தபின்பு தாத்தாவிடம் உதவி கேட்பான், அவரும் அவனுக்கு உதவி செய்வார்.

  

ஒரு கட்டத்தில் அவன் பெரியவனான பின்பும் அவனால் ஒரு தெளிவான முடிவு எடுக்க இயலாத சமயங்களில் அந்த விசயங்களை தாத்தாவிடம் சொல்ல தயங்கினான், காரணம் இவ்வளவு வயதாகியும் உனக்கு தன்னிச்சையாக முடிவு எடுக்க இயலாதா என கேலி செய்வார் என்று

  

அவனும் சில சின்ன சின்ன விசயங்களுக்கு முடிவு எடுப்பான், என்ன இரண்டிரண்டு முடிவுகளை எடுப்பான், அதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அவனுக்கு குழப்பம் வரும், அந்த குழப்பத்திற்கு தீர்வாக பூவா தலையா என நாணயத்தை சுண்டிப்போட்டு பார்த்து முடிவு எடுப்பது அவனது வழக்கமாகிவிட்டது. இந்த குணம் அவனுக்கு லண்டனில் படிக்கும் போது உண்டானது.

  

தனிமை, தாத்தா வேறு பக்கத்தில் இல்லை, தனித்து முடிவெடுப்பதில் சிக்கல், அந்நேரம் எல்லாம் தன்னிடம் இருக்கும் நாணயத்தை சுண்டுவான், தனது இரண்டு முடிவுகளில் ஒன்றை பூவாகவும் இன்னொன்றை தலையாகவும் வைத்திருப்பான், பூ விழுந்தால் அதன்படி நடப்பது தலை விழுந்தால் அதன்படி நடப்பது, இரண்டு முடிவுகளுமே சிறந்ததுதான், ஆனால் அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பது அவனுக்கு சிரமம், இதை பலவருடங்களாக செய்து வந்தான்.

  

இப்போதும் தாத்தா அவனை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் போது இரண்டு விதமாக யோசித்தான். ஒன்று தாய் தந்தையில்லையென்றாலும் தாத்தாதான் உறவென்று நினைத்து வாழ்ந்தவன், அவரை விட்டு பிரிய மனமின்றி அங்கேயே தங்கிவிடலாம் என யோசித்தான், இன்னொன்று தன்மானப்பிரச்சனை முன் வந்தது, இப்படி பேசிவிட்டாரே தாத்தா அதனால் ரோஷம் வந்து வீட்டை விட்டு தனியாக வாழ்ந்து காட்டினால்தான் தாத்தாவிற்கு நமது

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.