(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”5 வருஷத்துல என்ன நடந்துடுச்சி சார்“

  

”ஒண்ணும் இல்லை, தாளாளரா இருந்த ஈஸ்வரமூர்த்தி ரிட்டயர்டு ஆகி அந்த இடத்துக்கு அவரோட பேரன் கோவலன் வந்தாப்ல, அதுக்கு அப்புறம் இருந்துதான் அந்த கல்லூரியோட நிலைமையே மோசமாயிடுச்சி”

  

”ஏன் சார்”

  

”கோவலன் தம்பி வெளிநாட்டுல படிச்சவரு, அவரு இங்க கம்பெனி நடத்தறாரு கூடவே கல்லூரி தாளாளர் வேலை செய்றாரு அவரா அதை ஏத்துக்கலை, தானா வந்தது, அதை எப்படி வழிநடத்தனும்னு கூட அவருக்குத் தெரியலை, அவர் வெளிநாட்டு பாணியில கல்லூரியை மாத்தினதால ஒழுக்கம் கெட்டுப் போச்சி, மறுபடியும் கல்லூரியை பழைய படி மாத்தனும் அதை என்னால செய்ய முடியாது“

  

”ஏன் சார் முடியாது உங்களுக்கு எவ்வளவோ அனுபவம் இருக்கு எனக்கு எந்த அனுபவமும் இல்லையே”

  

“அனுபவம் எதுக்கு, உன்னோட நல்ல மனசு போதும் எல்லாருமே ஒழுக்கமா இருக்கனும்னு நினைக்கற அந்த எண்ணத்துக்காகதான் இந்த வேலையே, அதோட எனக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கு, 3வது முறை வந்தா என்னை காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்கம்மா, அதான் பார்க்கிறேன்” என கெஞ்சுவது போல பேசிவைக்க கண்ணகி மனம் இரங்கினாள்

  

”சரிங்க சார் நீங்க என்னை நம்பறீங்கன்னா நிச்சயம் நான் இந்த வேலைக்கு வரேன்”

  

”அதுக்கு முன்னாடி நீ முன்னாள் தாளாளரை சந்திக்கனும்”

  

”கண்டிப்பா சார் நாளைக்கே அவரை பார்க்க வரேன் ஆமா எங்க வரனும்”

  

”கல்லூரிக்கே வந்துடு, அவர் உன்னை வேலையில சேர்த்துப்பாரு நானும் நாளைக்கே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.