(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

என்ன செய்வ? இப்படி தூக்குவீயா?” என்றபடி அவளை மிக எளிதாக விவேக் கைகளில் ஏந்த, பாரதி திகைத்துப் போனாள்.

  

ஆனந்த்!!! விடுங்க... ப்ளீஸ் யாராவது பார்க்க போறாங்க...”

  

பார்க்கட்டும்...”

  

ப்ளீஸ்ங்க...”

  

சரி நீ சொல்ற...” கேலியாய் சொல்லியபடி, அவளை ஆழமில்லாத அந்த அலைகளில் விழுமாறு கீழே போட்டான் விவேக். அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்த்திராத பாரதி கையில் வைத்திருந்த செல்ஃபோனை கீழே தவற விட்டாள்.

  

யோ செல்ஃபோன் விழுந்திருச்சு...!”

  

கவலையோடு சொன்னவளை பார்த்து சிரித்து விட்டு,

  

ரொம்ப நல்லதா போச்சு போ... ஆனாலும் இந்த போஸில் சூப்பரா இருக்க ரதி...” என்றான் கேலியாக!

  

உங்களை...” என்றபடி பாரதி அவனை இழுக்க... அவள் இழுத்ததாலோ, அல்லது விவேக் விரும்பியதாலோ, அவனும் உடல் கடல் நீரில் நனைய அவளருகில் வந்தான்.

   

பின், சிறிது நேரம், சிறுக் குழந்தைகள் போல் நீரை ஒருவர் மீது தெளித்து விளையாடிவர்கள், எப்போது அதை நிறுத்தினார்கள், எப்போது அங்கிருந்து கிளம்பி அவர்களின் அறைக்கு வந்தார்கள் என்று எதுவுமே பாரதிக்கு நினைவில்லை... இரவு உணவை கூட மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி நாடினார்கள்.

  

🌼🌸❀✿🌷

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.