அனைத்தையும் பார்த்து முடித்து கொம்பனிடம் வந்து நின்று பார்த்தாள் அவனோ கெத்தாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து
”எப்படி” என தன் காலரை இழுத்துவிட்டுக் கேட்க அவளோ
”பரவாயில்லை” என்றாள் வேண்டுமென்றே ஆஹா சூப்பர் என சொன்னால் அவன் கர்வம் அதிகமாகும் என நினைத்தாள் அதைக்கேட்டு அவனோ
”என்னது பரவாயில்லையா நாள் முழுக்க கஷ்டப்பட்டு இந்த வீட்டை என்னோட வீடா மாத்தியிருக்கேன் எவ்ளோ சூப்பராயிருக்கு, உன் கண்ணு என்ன கோளாறா இல்லை நீ என்ன ரசனையில்லாதவளா”
”ஓஹோ உங்க வீடு போல இந்த வீட்டை மாத்தியிருக்கீங்களா ஏன்”
”பின்ன என் வீடு போல இருந்தாதானே என்னால நிம்மதியா தூங்க முடியும் இப்ப பாரு என் வீடு போல இருக்கு இனி நான் ஜாலியா இருப்பேன்”
”ஏன் இதுக்கு முன்னாடி நீங்க தூங்கினதேயில்லையா”
”தூங்கியிருக்கேன் இது உன்னோட வீடு தலைவிதியேன்னு தூங்குவேன் ஆனா இனிமேல அப்படியில்லையே”
”ஆக இந்த வீட்டை உங்க வீடு போல மாத்திட்டீங்க, ம் அப்ப இனிமேல உங்களுக்கு உங்க வீட்டு நினைப்பு வராது அப்படித்தானே”
”ஆமாம்”
”சூப்பர் அதுதான் வேணும் எனக்கு”