இருக்குன்னு பார்த்து மளிகை கடைக்கு போய் வாங்கி வந்து வைக்கனும், வீட்ல இருக்கறவங்க தினமும் பயன்படுத்தற சோப் சீப் துணிமணி இதெல்லாம் தேவையா வேற ஏதாவது வாங்கனுமான்னு தெரிஞ்சிக்கிட்டு வாங்கி வைக்கனும்
காய்கறிகளை வாங்கி வைக்கனும் அப்புறம் நீங்க வளர்க்கறீங்களே ஒரு நாய் அதுக்கு தேவையானதை வாங்கிப் போடனும், முன்னயாச்சும் பரவாயில்லை நானும் எங்கப்பாவும் மட்டும்தான் ஆனா இப்ப அப்படியில்லை, இந்த வீட்ல நாலு பேரு இருக்கோம் அதுக்கு ஏத்த மாதிரி செலவுகளும் அதிகரிக்கும் அதையெல்லாம் பார்த்துக்கனும்
வீட்டு வேலைகாரங்களுக்கு முன்னவிட இப்ப வேலைகள் அதிகமாயிருக்கும், அதுக்கு ஏத்த மாதிரி அவங்க சம்பளத்தை உயர்த்தனும், நாள் கிழமை விசேஷம் ஏதாவது வருதான்னு பார்த்து முன்கூட்டியே அதுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைச்சிடனும், தினமும் பூஜையறையை சுத்தம் செய்து விளக்கேத்தனும், வாரம் ஒரு முறை வீட்டை கழுவி மஞ்சள் குங்குமம் எல்லா இடத்திலயும் வைச்சி புனிதப்படுத்தனும், அப்புறம் வீட்டு வரவு செலவுகளை கணக்கு நோட்ல எழுதி வைக்கனும் அப்புறம்” என இழுக்க அதற்கே கொம்பன் கலங்கிப் போனான்
”ஏய் இரு இரு பொறு என்னால மூச்சுவிட முடியலை நிப்பாட்டு” என அலற அவள் அமைதியானாள்
”என்னாச்சி கொம்பா”
”என்ன நீ அடுக்கிக்கிட்டே போற என் வீட்ல கூட இவ்ளோ வேலையிருக்காது தெரிஞ்சிக்க”
”ஓ அப்படியா சரி அதையும் கேட்டுட்டு வா போ“
“எங்க”
”உன் வீட்டுக்குதான் நேரா போய் வீட்டு பொறுப்புகள் என்ன ஏதுன்னு கேளு உங்கம்மா விளக்கமா சொல்வாங்க, அதை கேட்டுட்டு இருட்டறதுக்குள்ள வந்து சேரு போ”