“ஓ லிஸ்ட்டா” என சொல்லிக் கொண்டே அதை பார்க்க அந்த பேப்பர் சுருளோ ஆறு அடிக்கு நீண்டது. கொம்பனது உயரத்திற்கு நிகராக அந்த பேப்பர் சுருள் இருந்தது
”நண்பா என்னடா இது இவ்ளோ நீளமான லிஸ்ட்டா”
”ஆமாம்” என்றான் பாவமாக
உடனே காவேரி சொன்ன லிஸ்ட்டையும் கொம்பன் கொண்டு வந்த லிஸ்ட்டையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் பார்த்தான். காவேரி சொன்னது ஒரு அடி பேப்பர்தான் அதைக்கண்ட கொம்பன் நீண்ட பெருமூச்சுவிட்டு அந்த சின்ன லிஸ்ட்டை வாங்க முயல உடனே உஷாரான காவேரி தான் சொன்ன லிஸ்ட்டை சட்டென பறித்துக் கொள்ள அதிர்ந்த கொம்பன் எழுந்து நின்று
”காவேரி மரியாதையா அந்த லிஸ்ட்டை கொடு” என அவளிடம் கோபம் கொள்ள அவளோ இம்முறை இருக்கையில் அமர்ந்து கால்மேல் கால் போட்டபடி
”முடியாது” என்றாள் அவனோ அவளின் தோரணையைக்கண்டு நொந்தான்
”அப்போ எவ்ளோ கெத்தா இருந்த இப்ப என்னாச்சி எங்க நீயும் கால்மேல கால் போட்டு உட்காரு பார்க்கலாம்” என சொல்ல அவனால் இயலவில்லை தயங்கினான்
”என்னைப் பாரு வெளி வேலைகளை கச்சிதமா செய்துட்டு வந்துட்டேன் நீயும் இருக்கியே வேஸ்ட்”
”அப்படியெல்லாம் சொல்லாத எனக்கு இதெல்லாம் புதுசு”
”அப்ப எனக்கு மட்டும் என்ன எல்லாமே புதுசுதான், எனக்கு யாரும் துணையில்லை நானே கத்துக்கிட்டு செய்யலை, உனக்கு உன் நண்பன் எங்கப்பா இருந்தும் உன்னால எதையும் செய்ய முடியலையே”