”வேணாம் வெறுப்பேத்தாத“
”அட என்ன கோச்சிக்கற வீட்டு பொறுப்புகளைதானே சுமக்கனும்னு சொன்னேன் என்னையா சுமக்கனும்னு சொன்னேன்”
”உன்னை சுமக்கறதுக்கு பதிலா இந்த வீட்டு பொறுப்புகளையே சுமக்கலாம்”
என பொங்கிவிட்டு லிஸ்ட்டை வாங்கிக் கொண்டு சென்றான்.
கணக்குபிள்ளையோ பரிதாபப்பட்டான் காவேரிக்கு சிரிப்பாக இருந்தது, கலகலவென சிரிக்க அந்த சிரிப்பு சத்தம் கொம்பனுக்கு கொடுமையாக இருந்தது, ஊருக்கு முன்னால் தலைநிமிர்ந்து வாழ்ந்ததை விட இவள் முன்னால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் தன்னைக்கண்டு பொறாமையில் அவளது வயிறு எரிய வேண்டும் என மனதில் கருவிக் கொண்டான் கொம்பன்.
மறுநாள் பொழுது விடிந்தது. யாரும் எழுப்பாமலே சுறுசுறுப்பாக எழுந்துக் கொண்டான் கொம்பன், கூடவே கணக்குபிள்ளையையும் சண்முகத்தையும் எழுப்பிவிட்டான். தன் தாய் தந்த பெரிய லிஸ்ட்டை கணக்குபிள்ளையிடம் தந்து
”ஒவ்வொண்ணா முடிக்கலாம் எது சுலபமோ அதை முதல்ல சொல்லு கஷ்டமாயிருக்கறதை பின்னாடி செய்யலாம்” என சொல்ல அதைக்கேட்டபடி வந்த காவேரியோ
”ஆரம்பமே தப்பு செய்ற பார்த்தியா, வீட்டு வேலைன்னு வந்துட்டா எல்லாமே முக்கியமானதுதான், இதுல கஷ்டம் சுலபம் பார்த்து நீ பிரிச்சி வேலை செய்தா எல்லா வேலையும் பாதிக்கும், அதனால லிஸ்ட் படி வேலையை ஆரம்பி நான் தோப்பு வேலைகளை பார்க்க போறேன், கவனம் வீட்டை பொறுப்பா பார்த்துக்கனும் உன்னை நம்பி முழு பொறுப்பை கொடுத்திருக்கிறேன், இதுல சின்னதா ஏதாவது சொதப்பின உன் மேல இருக்கற நம்பிக்கை போய் அவநம்பிக்கை வந்துடும், அதனால ஜாக்கிரதையா வேலையை