(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”வேண்டாம் என் பிரச்சனை என்னோட, நீ கிளம்பு நேரமாகுது பாரு” என சொல்ல மாதவியும் சரி சரியென தலையாட்டிவிட்டு சென்றாள்.

  

அவள் சென்றதும் கல்லூரிக்குள் நுழைய வாட்ச்மேன் செக்யூரிட்டி தடுக்க அவளோ வேலை விசயமாக வந்ததாக கூற அவர்களும் லெட்ஜரில் அவளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பினார்கள்.

  

அவளும் உள்ளே சென்றாள். கல்லூரி என்னவோ அழகாகதான் இருந்தது ஆனால் மாணவர்கள் மட்டும் ஒழுக்கமின்றி இருந்தார்கள், வகுப்புக்குள் செல்லாமல் ஆங்காங்கு அலைந்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் ஓடிபிடித்து விளையாடிக் கொண்டு, கதைகள் பேசிக் கொண்டு, பார்க்கிங் இடத்திலும் கான்டீனிலும் மாணவர்கள் மொய்த்தபடி இருக்க, சில மாணவர்கள் செல்போனில் மூழ்கியபடியே இருந்தார்கள்

  

இவர்கள்தான் இப்படியென்றால் ஆசிரியர்கள் அதற்கு மேல், அவர்களும் கதைகளை பேசிக் கொண்டும் போனில் பேசிக் கொண்டும் சென்றார்கள், என்னடா நம்மை கடந்து ஆசிரியர் செல்கிறாரே அவருக்கு வணக்கம் வைப்போம் என்ற எண்ணம் ஒரு மாணவனிடம் கூட இல்லை, அதே போல ஆசிரியர்களும் எந்த மாணவனிடமும் மரியாதையை எதிர்பார்க்கவில்லை, அங்கு இருக்கும் மாணவர்களை வகுப்புக்கு கூட செல்ல சொல்லவில்லை, அந்த இடமே பூங்கா போல தெரிந்தது, எப்படி பூங்காவில் மக்கள் உல்லாசமாக தங்கள் பொழுதை கழிப்பார்களோ அது போல இங்கு நடந்துக் கொண்டார்கள், அதைக்கண்டதும் ஏன் தான்தான் வேண்டும் என உதயமூர்த்தி தேடி வந்து தன்னை அழைத்தார் என்பதை புரிந்துக் கொண்டாள்.

  

அதற்குள் பெல் அடித்தது. சரி பெல் அடித்ததற்காகவாவது மாணவர்கள் செல்வார்கள் என எதிர்பார்த்தாள், சிலர் சென்றார்கள் சிலர் செல்லவில்லை, ஆசிரியர்களும் வகுப்புக்குச் செல்லாமல் இருந்தார்கள், அவளுக்கு இதையெல்லாம் கண்டு வெறுப்பே வந்தது.

  

நேராக தாளாளர் அறை நோக்கி வந்தாள், குறுக்கே வந்த ப்யூனிடம் தன்னைபற்றி சொல்லிவிட்டு வரவேற்பரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள், ப்யூனும் தாளாளர் அறைக்குச் சென்று கண்ணகி வந்த விசயத்தைக்கூற அங்கு அமர்ந்திருந்த

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.