கோவலனோ கடிகாரத்தைப் பார்த்தான், ஷார்ப்பாக 9 மணி என காட்ட
”ஓ சரியான நேரத்துக்கு வந்திருக்காளே, வேலை மேல அக்கறையா இல்லை சம்பளம் மேல ஆசையா பார்க்கலாம், அப்படி என்னதான் இருக்கு இவள்கிட்டன்னு தாத்தா இவளை பிரின்சிபால் ஆக்கி அழகு பார்க்கறாரு” என நினைத்தபடியே ப்யூனிடம் கண்ணகியை வரவழைக்க அனுமதி தர ப்யூனும் அதை கண்ணகியிடம் சொல்ல அவளும் எழுந்து தாளாளர் அறை முன் நின்று சிறியதாக கதவை திறந்து
”உள்ளே வரலாமா“ என கேட்க அந்த கம்பீரமான குரலில் தடுமாறினான் கோவலன்
”எஸ் கம்இன்” என்றான் அதிகாரமாக கண்ணகியும் உள்ளே நுழைந்தாள். கோவலனை அப்போதுதான் அவள் பார்த்தாளே, மாதவி சொன்னது போலவே இருந்தான், அவனும் அவளை ஏற இறங்கப் பார்த்தான்
”என்ன இது சின்ன வயசா இருக்கா, இவளுக்கு என்ன அனுபவம் இருக்கப் போகுதுன்னு பிரின்சிபாலா ஆக்கியிருக்காங்க, தாத்தாவுக்கு என்னாச்சி மூளை குழம்பிடுச்சா, இவளை நம்பி இவ்ளோ பெரிய காலேஜை எப்படி தர்றது” என யோசித்தபடியே அவளை வா என சைகை மூலம் அழைக்க அவளும் அவன் முன் சென்று நின்றாள் உட்காரு என்பது போல் சைகை செய்ய அவளும் புருவத்தை உயர்த்தி
”திமிரை பாரு பேச மாட்டானோ“ என நினைத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தாள்.
இருவருமே ஒருவரை ஒருவர் பரம விரோதிகளை போல பார்த்துக் கொண்டார்கள்.
சில நொடிகள் கழித்து கோவலனே பேசினான்
”பேர் என்ன”
”கண்ணகி” என்றாள் அதைக்கேட்டு இளப்பமாக சிரித்தவன்