”ஓ ஸ்கூல் டீச்சரா” என்றான் நக்கலாக
”ஆமாம் சார் பள்ளிக்கு அடுத்துதானே காலேஜ், எடுத்த உடனே யாரும் காலேஜ்க்கு போறதில்லையே” என சொல்ல அவன் கடுப்பானான். உஷ்ணமாக பெருமூச்சுவிட்டவன் அந்த ஃபைலை மூடிவிட்டு அவளிடம்
”இந்த வேலைக்கு எதுக்கு வந்தீங்க மேடம், என்ன தகுதியிருக்கு உங்களுக்கு, அனுபவம் இல்லை ஒண்ணும் இல்லை சாதாரண பள்ளிக்கூடத்தில எட்டாவது ஒன்பதாவது படிக்கற பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கற டீச்சர்க்கு இங்க பிரின்சிபால் வேலையா”
”நீங்க சரியாதான் சொன்னீங்க சார், நான் சாதாரண டீச்சர்தான், எனக்கு அனுபவம் இல்லைதான், ஆனா நான் வேலை பார்த்த பள்ளியில ஒழுக்கத்தை கத்துக் கொடுத்திருக்கேன், அந்த ஒழுக்க பாடத்துக்காகவே என்னை இங்க வேலைக்கு கூப்பிட்டாங்க”
”ஒழுக்கமா ஓ காட், இது காலேஜ், ஸ்கூல் கிடையாது ஸ்கூல் பசங்களை கையாள்ற மாதிரி இங்க நடந்துக்க கூடாது”
”ஸ்கூலோ காலேஜோ படிக்கறது மாணவர்கள்தானே அவங்களுக்கு ஒழுக்கத்தை கத்துக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை சார்”
”ப்ச் இந்த காலேஜ்ல எல்லாம் சரியாதான் இருக்கு”
”அப்படித் தெரியலையே சார்”
”வாட் யூ மீன்”
”இந்த காலேஜ்ல ஒழுக்கம் இல்லைன்னு சொல்றேன் சார்”
”யூ ஆர் ராங்”