(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”சார் நான் இப்பதானே பார்த்துட்டு வரேன்”

  

”என்னத்த பார்த்த நீ, என் காலேஜையே குறை சொல்றியா” என கோபத்தில் அவளது ஃபைலை தூக்கி அவள் முன் எறிந்தான்

  

“தப்பு காலேஜ் மேல இல்லை அதை நிர்வாகம் செய்ற உங்க மேலதான், நீங்களே ஒழுக்கமில்லாம மரியாதையில்லாம பேசறீங்களே சார், உங்களை வைச்சே சொல்லிடலாம் இந்த காலேஜோட நிலைமையை பத்தி” என சொல்ல கோவலனுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. அதைக்கண்ட கண்ணகிக்கு

  

”பாவம் மாதவி எப்படித்தான் இந்த கோபமான திமிர்பிடிச்சவன் கிட்ட வேலை பார்க்கறாளோ” என பாவம் பட்டாள்.

  

”நீங்க என்ன அப்படி ஒழுக்கமின்மையை பார்த்தீங்கன்னு நானும் பார்க்கிறேன் எழுந்து வாங்க மேடம்” என ஒவ்வொரு வார்த்தையையும் கடித்து துப்ப அவளும் துணிச்சலாக எழுந்து நின்றாள்.

  

அவள் முன் வேக வேகமாக நடந்துச் சென்றான், அவளோ அமைதியாக நடந்து வந்தாள். கோவலனோ அவசரமாக வெளியேறி நின்று பார்க்க அவளோ மெதுவாக நடந்து வந்து நின்றாள்

  

”இவ்ளோ நிதானமா இருந்தா எப்படி”

  

”இது நிதானம் இல்லை சார் பொறுமை, உங்களை போல அவசர அவசரமா ஓடியா வரமுடியும்”

  

”சரி பாருங்க மேடம் அப்படியென்ன ஒழுக்கமின்மையை கண்டுபிடிச்சிங்க” என கேட்க அவளும் பார்த்தாள், அப்படியேதான் இருந்தது

  

”பெல் அடிச்சி 10 நிமிஷம் ஆகியும் ஏன் மாணவர்கள் எல்லாரும் வகுப்புக்கு போகாம இங்கயே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.