”அது வந்து சம்பந்தி வந்து”
”என்ன வந்து போயி, விசயத்தை முழுசா சொல்லுங்க யார் இந்த பொண்ணு”
”உங்க வீட்டு சின்ன மருமகள்”
”எது சின்ன மருமகளா, ஏற்கனவே எங்கவீட்ல ஒரு மருமகள் இருக்காளே போதாதா இது என்ன இலவச இணைப்பு” என கேட்க குபேரனுக்கு நாக்கு வறண்டுவிட்டது. உடனே வேணி வீரசிங்கத்திடம்
”அது ஒண்ணுமில்லை அண்ணா, என் பொண்ணுதான் இந்த வீட்டு மருமகளா ஆக கொடுத்து வைக்கலை, 6 மாசம் கழிச்சி அவள் எப்படியிருந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியேறி எங்க வீட்டுக்கு வந்துடுவா”
”அப்படி நடக்க விட்டுடுவேனா நானு, நான் ஊர்ல இல்லாத நேரமா பார்த்து கோர்ட் அது இதுன்னு போய் வந்தாங்க, போனது போகட்டும் இனி நான் இருக்கேன்ல என் மருமகளை நான் விடமாட்டேன்”
என சொல்ல ஜானகி அதிர்ந்தாள். அவளுக்கு வீரசிங்கம் மட்டுமே பெரிய பிரச்சனை என்பதால் இவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் திணறினாள். அதற்குள் மங்களம் ஆரத்தி தட்டுடன் வர அவரை தடுத்து நிப்பாட்டினார் வீரசிங்கம்
”எங்க நீ பாட்டுக்கு போற“
”இல்லைங்க சின்ன மருமகளுக்கு ஆரத்தி எடுக்கலாம்னு”
”என்னத்த சின்ன மருமகள்ன்னு சொல்லிக்கிட்டு இருக்க, புத்திகித்தி பிசகிடுச்சா” என சத்தம் போட அவ்வளவுதான் மங்களம் தன் வாயை திறக்கவே இல்லை.