”ஆமாம்”
“துரோகி”
”ப்ச் அவசரப்பட்டு வார்த்தையை விடாத, அவங்க முன்னாடி நான் சரின்னு சொன்னேன் அவ்ளோதான்”
”அப்படின்னா“
”இதப்பாரு வேங்கையன் வாழ்க்கையில இன்னொரு பொண்ணு உள்ள நுழைஞ்சா என்னாகும்”
”என்னாகும்”
”ஏற்கனவே இருக்கற உன்னை வெளிய சீக்கிரமா அனுப்பிடுவாங்க”
”அப்படியா அனுப்பிடுவாங்களா”
”ஆமாம் கண்டிப்பா அனுப்பிடுவாங்க, அப்படி நீ போய் உன் மூர்த்தி மாமாவை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு வையேன் அடுத்த நொடி நான் இந்த ஊரை விட்டு கிளம்பிப் போயிடுவேன்”
”அப்போ வேங்கையனோட நிலைமை”
”அது எப்படி போனா உனக்கென்ன, அவன்தான் மோசமானவனாச்சே”
”ஆமாமாம் அவனுக்கு எது நடந்தா எனக்கென்ன” என சொல்லியவள் மஹதியை பார்த்து புன்னகைத்து
”என்னவோடி நீ வந்ததும் நான் ஆடிப்போயிட்டேன், உன்னை கூட்டிக்கிட்டு மூர்த்தி மாமாவை பார்க்கலாம்னு நினைச்சேன் ஆனா, நீ பாட்டுக்கு திடுதிப்புன்னு இங்க வந்து இறங்கவும் எனக்கு