(Reading time: 19 - 37 minutes)
Chinna marumagal
Chinna marumagal

எனக்கு அவன் மேல நிறைய உரிமையிருக்கு, அவன் வாழ்க்கையை சரியாக்கனும்னு நான் பார்க்கிறேன் அது தப்பா”

  

”அப்படிப்பார்த்தா எனக்கும்தான் உரிமையிருக்கு”

  

”உரிமையிருந்தா அவனுக்கு எது நல்லதோ அதை செய்யனுமே தவிர அவனை இன்னும் பாதாளத்தில தள்ள ஆசைப்படக் கூடாது”

  

”எது நானா என் புள்ளை சந்தோஷமா இருக்கனும்னு ஒவ்வொரு நொடியும் யோசிக்கறவன் நானு, என்கிட்டயா நீ இப்படி பேசற”

  

”ஆமாம் அப்படித்தான் பேசுவேன், நீங்க ஒரு சுயநலவாதி உங்களோட கௌரவத்துக்காக பெத்த புள்ளையை கூட வாழவிடமாட்டீங்க, நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு புள்ளை, அவன் சந்தோஷத்தை பார்க்காம உங்க கௌரவத்தையே பார்த்தா எப்படி”

  

”ப்ச் ஏற்கனவே அவனுக்கு ஜானகியோட கல்யாணம் ஆயிடுச்சி அப்படியிருக்கறப்ப”

  

“போதும்ங்க நான் சொன்னது சொன்னதுதான், இதோ இவள்தான் இந்த வீட்டு சின்ன மருமகள், இதை நீங்க ஏத்துக்கனும், ஏத்துக்க முடியாதவங்க தாராளமா இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம், யாருக்காகவும் என் புள்ளை சந்தோஷத்தை நான் கெடுக்கறதா இல்லை” என சொல்லியவர் அதே கோபத்துடன் மஹதிக்கு ஆரத்தி சுற்றி அவளின் நெற்றியில் திலகம் இட்டு

  

”சின்ன மருமகளே உள்ள வாம்மா யார் உன்னை தடுக்கறாங்கன்னு நானும் பார்க்கிறேன், பயப்படாத நான் இருக்கேன்” என சொல்ல மஹதிக்கு என்ன பயம் தைரியமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.

  

வீரசிங்கமே கதிகலங்கிப் போய்விட்டார், வேங்கையன் முகத்தில் ஈயாடவில்லை, தன் தாயா இந்தளவு பேசியது என நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

  

ஆரத்தியை தெருவில் கொட்டிவிட்டு வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார் மங்களம், அதற்குள்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.